;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (12.03.2018)

0

பராக்கிரம சமுத்திரத்தின் 8 வான் கதவுகள் திறப்பு

பொலன்னறுவை, பராக்கிரம சமுத்திரத்தின் 8 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் தாழ்நில பகுதிகளான தமன்கடுவ மற்றும் லங்கபுர ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுருத்தப்படுகின்றது.

கரையோர பிரதேசங்களில் கடும் மழை

காலி முதல் ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக முல்லைத்தீவு வரையிலான கரையோர பிரதேசங்களிலும் கடற்பகுதிகளிலும் கடும் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

காலநிலை அவதான நிலையம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மழைபெய்கின்ற வேளையில், காற்றின் வேகம் மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வரையில் அதிகரிக்க கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக எதிர்வரும் 48 மணி நேரத்தில் கடற்பகுதியில் கடற்றொழில் மற்றும் கடற்பயண நடடிக்கைகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலாதுறைக்கு அச்சுறுத்தல்

கண்டியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இன்று வரையில், சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்து, அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதாக அமைச்சர் கபீர் ஹஷீம் தெரிவித்துள்ளார்.

கேகாலை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

கண்டி சம்பவங்களினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போது, சுற்றுலா நிமிர்த்தம் இலங்கை வந்து, குறித்த பகுதிகளில் தங்கியிருந்தவர்கள், அங்கிருந்து வெளி செல்ல முடியாத நிலையில் சிரமங்களை எதிர்நோக்கினர்.

இதனால், நாட்டிற்கு வருகைத்தரும் சுற்றுலா பயணிகள் குறைவடைந்தனர்.

இது ஒரு பிரதேசத்திற்கோ, அல்லது மாவட்டதிற்கோ பாதிப்பை ஏற்படுத்தும் விடயம் இல்லை.

முழுநாடும் எதிர்க் கொள்ளவேண்டிய பாரிய பிரச்சினை எனவும் அமைச்சர் கபீர் ஹஷீம் தெரிவித்தார்.

சூரியசக்தி மின்னுற்பத்தி – இந்தியா 100 மில்லியன் அமெரிக்க டொலர் சலுகைக்கடன்

சூரியசக்தியின் மூலமான மின்னுற்பத்தி திட்டங்களுக்கு இந்தியா 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை சலுகைக்கடன் அடிப்படையில் வழங்கியுள்ளது.

இலங்கைக்கான இந்திய தூதரகம் இன்று இதனை தெரிவித்துள்ளது.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன டெல்லியில் நடைபெற்ற சர்வதேச சூரிய சக்தி கூட்டணி மாநாடு கடந்த 10ஆம் திகதி ஆரம்பமானது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார்.

சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான நிகழ்வின் போது இந்திய பிரதமர் நரேந்திரமோடி , இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் ஆகியோரை இந்திய ஜனாதிபதி ராம்நாம் கோவிந் சந்தித்து உரையாற்றினார்.

இதன் ஒரு தொடராகவே இலங்கைக்கு இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பில் 62 நாடுகள் கலந்துகொண்டன. இந்த நாடுகளில் 32 நாடுகள் இந்த அமைப்பிற்கான திட்டப்பணி குறித்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன. இந்த அமைப்பில் இலங்கை கடந்த பெப்ரவரி 12ஆம் திகதி முழுமைத்துவம் பெற்ற அங்கத்துவ நாடாக கையொப்பமிட்டது.

பத்து வருடங்களுக்கு மேலாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு இடமாற்றம்.

ஒரே பாடசாலைகளில் பத்தாண்டுகளுக்கு மேலாக தரம் 6க்கும் 11க்கும் இடைப்பட்ட வகுப்புக்களில் கற்பித்த ஐயாயிரத்து 473 ஆசிரியர்களுக்கு இம்மாதம் இறுதிப்பகுதியில் இடமாற்றம் வழங்கப்படவுள்ளது.

மூன்று கட்டங்களின் கீழ் தேசிய பாடசாலைகளுக்கான இந்த ஆசிரிய இடமாற்றம் அமுல்படுத்தப்பட இருக்கிறது. இதன் முதல் கட்டம் கடந்த வருடத்தின் இறுதிப்பகுதியில் இடம்பெற்றது.

உயர்தரப்பரீட்சையில் உயர்தர வகுப்புக்களில் ஆசிரியர்களாக பணியாற்றிய இரண்டாயிரத்து 590 ஆசிரியர்கள் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்கள். இரண்டாம் கட்டம் இவ்வருடத்தின் முதல் பகுதியில்; ஆரம்பிக்கப்பட்டது.

இதில் தரம் ஒன்றுக்கும், ஐந்துக்கும் இடைப்பட்ட வகுப்புகளில் பத்தாண்டுகளுக்கு மேலாக சேவையாற்றிய ஆயிரத்து 441 ஆசிரியர்களில் 760 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது.

ஆனால் கடந்த ஆண்டில் தரம் ஒன்றிற்கும், மூன்றிற்கும் இடைப்பட்ட வகுப்புக்களில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 − 5 =

*