;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (13.03.2018)

0

தென்பகுதியில் தாழமுக்கம்.

இலங்கையின் வளிமண்டலத்தில் உருவான தாழமுக்கம் நாட்டின் தென்பகுதியில் நிலைகொண்டுள்ளது.

இது மென்மேலும் வலுவடைந்து மேற்கிற்கும், வடமேற்கிற்கும் இடையிலான திசையில் அரேபிய கடலை நோக்கி நகர்ந்து செல்லக்கூடும்.

இதன் காரணமாக தீவின் பல பாகங்களிலும், சூழவுள்ள கடல்பரப்பிலும் மேக மூட்டத்துடன் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம் என்று என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு;ள்ளது.

வடமத்திய மாகாணத்திலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மணிக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு கடும் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக தெற்கு, ஊவா, கிழக்கு மாகாணங்களிலும், மாத்தளை, பொலன்னறுவை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 முதல் 100 மில்லி மீற்றர் வரையிலான மழைபெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

கடற்றொழிலாளர்களுக்கு ஆலோசனை – விளக்கம் கோரலாம் என இடர்காப்பு மத்திய நிலையம் அறிவிப்பு

அடுத்து வரும் மணித்தியாலங்களில் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கடற்றொழிலாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாணத்திலிருந்து நீர்கொழும்பு, கொழும்பு, காலி ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்பு கொந்தளிப்பானதாக இருக்;கும்.

எனவே அடுத்துவரும் இரண்டு நாட்களில் கடற்றொழிலுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு கடற்றொழில் நீரியல்வள அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

ஏதேனும் நெருக்கடிகள் இருந்தால் தொலைபேசி மூலம் விளக்கம் கோரலாம் என இடர்காப்பு மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அழைக்க வேண்டிய இலக்கங்கள் 117 அல்லது 0112-67-00-02.

சமூக வலைதளங்களை சமூக நலன்களுக்காகப் பயன்படுத்துவது அவசியம்

சமூக வலைதளங்களை சமூக நலன்களுக்காகப் பயன்படுத்துவது அவசியம் – அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார

சமூக வலைதளங்களை சமூக நலனுக்காக பயன்படுத்த வேண்டும். எனவே சமூக வலைதளங்களை கண்காணிப்பது அவசியமாகிறது

சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணித்தியாலங்களில் கண்டியில் எதுவித மோதல்களும் அறிவிக்கப்படவில்லை என;றும்ட அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் சுதந்திர இணையத்தள பிரவேசத்துக்கு ஐ.நா.சபை ஆதரவு

இலங்கையில் சுதந்திர இணையத்தள பிரவேசத்துக்கு ஆதரவளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் நாளாந்த செய்தியாளர் சந்திப்பில், இலங்கையில் பேஸ்புக் உள்ளிட்ட சமுக வளைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, பேச்சாளர் ஸ்டெபன் டுஜாரிக் இந்த பதிலை வழங்கியுள்ளார்.< இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகளின் அரசியல் துறை உதவி பொதுசெயலாளர் ஜெப்ரி ஃபெல்ட்மன், சமுக வலைத்தளங்களுக்கான தடைகள் குறித்து அவதானம் செலுத்தினாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்து தமக்கு தகவல் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்ட ஐக்கிய நாடுகளின் பேச்சாளர், ஆனால் இணையத்தளத்துக்கு சுதந்திரமாக பிரவேசிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்ற விடயத்திற்கு ஐக்கிய நாடுகள் ஆதரவளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.< மேலும் ஐக்கிய நாடுகளின் உதவி பொதுச் செயலாளர், இலங்கையில் சிறுபான்மையினருக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் அரசாங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − 1 =

*