;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (13.03.2018)

0

மின் உற்பத்திக்கு போதுமான மழை வீழ்ச்சி இடம் பெறவில்லை

பல மாவட்டங்களில் சில பிரதேசங்களில் குறிப்பிடத்தக்க மழை பெய்த போதிலும் நீரேந்து பகுதிகளில் மின் உற்பத்திக்கு அவை போதுமானதல்ல என மின்சக்தி மற்றும் நிலைபேறான எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் அபிவிருத்தி பணிப்பாளர் சுலக்ஷன ஜயவர்தன கருத்து தெரிவிக்கையில் ,

கடந்த சில தினங்களாக நாளாந்த மின்சார தேவை அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.

நீர் மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் ஆறு பாரிய நீர்த்தேக்க பகுதியில் குறிப்பிடத்தக்க மழை வீழ்ச்சி இடம் பெறவில்லை என்று குறிப்பிட்டார்.

இருப்பினும் மின்சார துண்டிப்பின்றி மின் விநியோகத்தை மேற்கொள்ளவிருப்பதாக மின்சக்தி மற்றும் நிலைபேறான எரிசக்தி அமைச்சு பணிப்பாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.

வெள்ள அனர்த்த பிரதேசத்திலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு வள்ளங்கள்

திடீர் வெள்ள அனர்த்தம் ஏற்படும் கிராம உத்தியோகஸ்த்தர் பிரிவுகளில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு வள்ளங்கள் மற்றும் எஞ்ஜின் உள்ளிட்டவை வழங்கப்படவுள்ளன.

இதற்கான வேலைத்திட்டத்தை பொலிஸ் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சு ஆரம்பித்துள்ளது.

இதற்கமைவாக இந்த பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் தலைமையில் இந்த பொருட்கள் வழங்கப்படவுள்ளன.

முச்சக்கர வண்டி சாரதிகள் பத்தாயிரம் பேருக்கு சுற்றுலாப் போக்குவரத்து பயிற்சி

முச்சக்கர வண்டி சாரதிகள் பத்தாயிரம் பேருக்கு சுற்றுலாப் போக்குவரத்து பற்றிய பயிற்சியைப் பெற்றுக் கொடுக்க வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த வேலைத்திட்டம் நிதி அமைச்சின் ஆலோசனைக்கு அமைவாக முன்னெடுக்கப்படுகிறது.

சகல முச்சக்கரவண்டி சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பயிற்சிக்கு சாரதிகள் தெரிவு செய்யப்படுவர்.

மூன்று கட்டங்களாக பயிற்சிகள் வழங்கப்படும் என்று வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

திருகோணமலை – நெல் அறுவடைக்கு பாதிப்பு

திருகோணமலை மாவட்டத்தில் இம்முறை நெல் அறுவடைக்கு காத்திருந்த விவசாயிகள் நேற்றிரவு முதல் பெய்து வரும் அடைமழையால் பெரிதும் பாதிக்கப்படட்டுள்ளார்கள்.

ஏற்கனவே மாவட்டத்தின் சில பகுதிகளில் விவசாயிகள் அறுவடையை நிறைவு செய்தும் இன்னுமொரு பகுதியினர் மழையை எதிர்பார்த்தும் காத்திருக்கின்றனர்.

எனவே கிடைத்த மழைவீழ்ச்சியானது ஒரு சில விவசாயிகளுக்கு சாதகமாகவும் மறுபுறம் அறுவடைக்கு காத்திருந்த விவசாயிகளுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

எனினும் மாவட்டதின் சில பகுதிகளில் மழையை நம்பி விவசாயம் செய்த விவசாயிகளின் வயல் நிலங்கள் வறட்சி காரணமாக கைவிடப்பட்டும் காணப்படுகின்றன.

உரிய உத்தியோகத்தர்கள் இவை தொடர்பான தகவல்களை சேகரித்தும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × one =

*