;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (14.03.2018)

0

சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக 36 ஆயிரத்து 500 கோடி ரூபா வெளிநாட்டு முதலீடு.

2020ம் ஆண்டு வரையில் சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக 36 ஆயிரத்து 500 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு முதலீட்டுச் செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இதுதொடர்பாக சுகாதார போஸாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவிக்கையில் .

ஐரோப்பிய நாடுகள் அமெரிக்கா அவுஸ்திரேலியா சீனா ஜப்பான் இந்தியா அவுஸ்திரேலியா போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகளிடம் இருந்து இந்த வெளிநாட்டு முதலீட்டுச் செயற்திட்டங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இந்த முதலீட்டுத் தொகை சலுகைக் கடன் அடிப்படையிலும் நிதியுதவியாகவும் கிடைக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடை சில தினங்களில் நீக்கப்படும் – ஜனாதிபதி

அம்பாறை மற்றும் கண்டி பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்களைத் தொடர்ந்து பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடை எதிர்வரும் சில தினங்களில் நீக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சமூகத்தின் நலனைக் கருத்திற் கொண்டு இவ்வாறான விடயங்களுக்கு இடமளித்தாலும், சமூகத்திற்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமானால் அதனை கட்டுப்படுத்துவதற்கும் ஏதாவது ஒரு முறை இருக்க வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர்களை சந்தித்து பேசிய போது இதனைக் கூறியுள்ளார்.

இந்தச் சந்திப்பு டோக்கியோவின் இம்பீரியல் ஹோட்டலில் நேற்று மாலை இடம்பெற்றது. கையடக்கத் தொலைபேசி, கணனி, இணையத்தளம், சமூக வலைத்தளங்கள் என்பன சமூகத்தின் நலனுக்காகவே பயன்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

எனினும், இலங்கையில் சிலர் இந்த வளங்களை நாட்டை சீர்குலைப்பதற்காகப் பயன்படுத்துகின்றனர். அதனால், இந்த வளங்களை உரிய முறையில் பயன்படுத்துவது தொடர்பான புதிய வேலைத்திட்டமொன்று எதிர்வரும் சில வாரங்களுக்குள் நாட்டிற்கு அறிமுகப்படுத்தப்படும்.

இதன் போது அனைத்து பிரஜைகளும் தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டியதேவை இருப்பதாக ஜனாதிபதி வலியுறுத்தினார். தொழில்வாண்மையாளர்கள், வர்த்தகர்கள், மாணவ சங்க பிரதிநிதிகள், போன்ற பல்வேறு துறைகளையும் சேர்ந்தோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

காலநிலை

இலங்கையின் தென்மேற்கு பகுதியில் ஏற்பட்டகாற்றழுத்தத் தாழ்வுமண்டலம் தற்போது கொழும்பிலிருந்து 550 கி.மீ தூரத்திற்கு நகர்ந்துள்ளது.

இது நாட்டை விட்டு விலகி அராபியக் கடற்பரப்பை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே இதனால் நாட்டின் வானிலையில் ஏற்பட்ட தாக்கம் படிப்படியாக குறையுமென எதிர்பார்க்கப்படுகின்றது என்று வளிமண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வடக்கு, கிழக்கு, வடமத்திய,ஊவா மற்றும் தென் மாகாணங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வவுனியா, மன்னார், புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் சில இடங்களில் (75 மி.மீ அளவான ) ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது

வடமத்திய மாகனத்திலும் காலி மாவட்டத்திலும் (மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான) ஓரளவு பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − six =

*