;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (14.03.2018)

0

பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

இலங்கையின் தென்மேற்கு பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது கொழும்பிலிருந்து 550 கி.மீ தூரத்திற்கு நகர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது நாட்டை விட்டு விலகி அராபியக் கடற்பரப்பை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே நாட்டின் வானிலையில் ஏற்பட்ட தாக்கம் படிப்படியாக குறையுமென எதிர்பார்க்கப்படுகின்றது என வளிமண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வவுனியா, மன்னார், புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் சில இடங்களில் (75 மி.மீ அளவான ) ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமத்திய மாகனத்திலும் காலி மாவட்டத்திலும் (மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான) ஓரளவு பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு; மே 15 வரை விண்ணப்பிகலாம்

2018 ஆம் ஆண்டின் அரச புகைப்பட விழாவுக்கு தற்பொழுதிலிருந்து படைப்புகள் ஏற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயத்தினை உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி கலாச அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து மேற்படி திணைக்களம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஐந்து பிரிவுகளின் கீழ் நடைபெறும் இந்த விழாவுக்கு இலங்கையர் அனைவரும் தமது படைப்புக்களை அனுப்பி வைக்க முடியும். விண்ணப்பம் உள்ளிட்ட விபரங்களை பிரதேச செயலகத்திலும், மாவட்ட செயலகத்திலும் பெற்றுக் கொள்ள முடியும். கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் தலைமையகத்திலும் விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

விண்ணப்பங்களை நாட்டில் உள்ள எந்தவொரு பிரதேச செயலகத்திலோ அல்லது மாவட்ட செயலகத்திலோ கையளிக்க முடியும்.

கலாசார திணைகத்தின் தலைமையகத்திற்கு நேரடியாகவோ, பதிவுத்தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கப்ப முடியும். மேமாதம் 15 ஆம் திகதி வரை இதற்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

2018 ஆம் ஆண்டின் அரச புகைப்பட விழா

2018 ஆம் ஆண்டின் அரச புகைப்பட விழாவுக்கு தற்போது படைப்புகள் ஏற்கப்படுகின்றன.

இதனை உள்நாட்டு அலுவல்கள், மேல் மாகாண அபிவிருத்தி கலாச அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.

ஐந்து பிரிவுகளின் கீழ் நடைபெறும் இந்த விழாவுக்கு இலங்கையர் அனைவரும் தமது படைப்புக்களை அனுப்பி வைக்க முடியும்.

விண்ணப்பம் உள்ளிட்ட விபரங்களை பிரதேச செயலகத்திலும், மாவட்ட செயலகத்திலும் பெற்றுக் கொள்ள முடியும். கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் தலைமையகத்திலும் விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

விண்ணப்பங்களை நாட்டில் உள்ள எந்தவொரு பிரதேச செயலகத்திலோ அல்லது மாவட்ட செயலகத்திலோ கையளிக்க முடியும்.

கலாசார திணைகத்தின் தலைமையகத்திற்கு நேரடியாகவோ , பதிவுத்தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கப்ப முடியும். மேமாதம் 15 ஆம் திகதி வரை இதற்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

இனங்களுக்கு மத்தியில் நிலவும் சந்தேகத்தையும், மனக் கிலேசத்தையும் களைவதற்கு பொது நிர்வாக அமைச்சு வேலைத்திட்டம்

பல்வேறு இனக் குழுமங்கள் மத்தியில் நிலவும் சந்தேகமும், அச்சமும் காரணமாக நாட்டின் முன்னேற்றப் பயணத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இந்தத் தீய எண்ணங்களை களைவதற்கு விசேட திட்டமொன்றை அமுலாக்க பொது நிர்வாக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டத்தின் கீழ் மாவட்டம் தோறும் சமாதான அமைப்புக்கள் ஸ்தாபிக்கப்படும். பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் 14 ஆயிரம் சமாதானக் குழுக்கள் அமைக்கப்படவுள்ளன.

பல்லின மக்களின் பங்களிப்போடு தமிழ் – சிங்கள புத்தாண்டு விழாவும், வெசாக் வைபவமும் ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக அமைச்சர் வஜிர அபேவர்தன கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 − ten =

*