;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (14.03.2018)

0

வைபரைத் தொடர்ந்து வட்ஸ் அப் மீதான தடையும் நீங்குகிறது

சமூகத் தளங்களில் ஒன்றான வட்ஸ் அப் பயன்பாட்டுக்கு இலங்கையில் விதிக்கப்பட்டிருந்த தடை இன்று நள்ளிரவு நீக்கப்படுவதாக தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஒஸ்டின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

கண்டியில் முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்களைத்தொடர்ந்து ஏற்பட்டிருந்த அசாதாரண நிலைமையினால் சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்து. இதன்படி பேஸ்புக், வட்ஸ் அப், வைபர் உள்ளிட்ட முக்கியமான சமூகத் தளங்கள் இலங்கை எல்லைக்குள் முடக்கப்பட்டன.

கடந்த ஏழாம் திகதியிலிருந்து குறித்த தளங்கள் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து இதற்கு பல்வேறு தரப்பினர்களும் எதிரிப்பு வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையிலேயே, இன்று நள்ளிரவு முதல் வட்ஸ்அப் பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வைபர் (Viber) பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று நள்ளிரவு முதல் நீக்கப்பட்டாலும் பேஸ்புக் மீதான தடை இன்னும் நீடித்து வருகின்றமை குறிபிடத்தக்கதாகும்.

கழிவுகளை வீசத் தெரியாதோருக்கு எதிராக கடும் நடவடிக்கை

கழிவுபொருட்களை உரிய வகையில் வகைப்படுத்தி சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கு வழங்குமாறு கொழும்பு மாநகர சபை மீண்டும் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்கு முன்னரும் இவ்வாறு பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் இந்த பணிகள் உரிய முறையில் இடம் பெறவில்லை என கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கொழும்பு மாநகர சபை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதுடன் கழிவுப் பொருட்களை கண்ட இடங்களில் வீசியெறிவோருக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

இதேவேளை இலங்கையில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் ஆகிய உக்காத பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடமாகாணத்தில் தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க அமைச்சினால் கால்நடை அபிவிருத்தி திட்டம் முன்னெடுப்பு

தேசிய ஒருமைபாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு கால்நடை அபிவிருத்தி திட்டமொன்றை யுத்தம் நிலவிய வட பகுதியில் முன்னெடுத்துள்ளது.

ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவை அமைச்சராக கொண்ட இந்த அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் இடம் பெயர்ந்தவர்கள் மீள்குடியமர்த்தப்பட்ட குடும்பங்கள் குடும்ப தலைவிகளை கொண்ட குடும்பங்கள் மற்றும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டோர் ஆகியோர் நன்மையடையவுள்ளனர்.

இந்த திட்டத்தின் கீழ் தோலகட்டியிலுள்ள நெல்லிப்பானம் தயாரிக்கும் நிலையத்திற்கு 3.5 மில்லியன் பெறுமிதியாக உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிலையத்தின் தயாரிப்பு தரத்தை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும். கிறிஸ்தவ அமைப்பினால் முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்தின் மூலம் பெரும் எண்ணிக்கையிலானோர் நன்மையடைவார்கள் என்று தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வி.சிவஞானஜோதி தெரிவித்தார்.

சங்காணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாதணிகளை தயாரிகக்கும் நிலையத்திற்கும் இயந்திர உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இங்கு தயாரிக்கப்படும் பாதணிகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான தொழிநுட்ப உதவியையும் அமைச்சு வழங்கியுள்ளது.

மருதங்கெனி பிரதேச செயலாளர் பிரிவில் குடத்தனை உணவு உற்பத்தி கிராமத்துக்கும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

நாகர் கோவில் உள்ள பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டடம் தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அமைச்சினால் புனரமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு 2.3 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது என்றும் தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க அமைச்சு செயலாளர் வி.சிவஞானஜோதி மேலும் தெரிவித்தார்.

மாணவர் கடன் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு

மாணவர் கடன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு ஜி.சி.ஈ சாதாரண தரப் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற போதும், பல்கலைக்கழக அனுமதி பெறாத மாணவர்களுக்கு எட்டு லட்சம் ரூபா வரையிலான கடன் வசதிகளை வழங்குவதென உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த மாணவர்கள் கடன் வசதியை பயன்படுத்தி தனியார் நிறுவனங்களில் உயர் கல்வியை தொடர வாய்ப்பளிப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

இதுபற்றிய மேலதிக விபரங்களை உயர்கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் அறிய முடியும். முகவரி, www.mohe.gov.lk என்பதாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × three =

*