;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (15.03.2018)

0

அரச நாடக விழா எதிர்வரும் 27 ஆம் திகதி

அரச நாடக விழா எதிர்வரும் 27 ஆம் திகதி கொழும்பு நெலும் பொக்குண கலையரங்கில் மாலை 6.00 மணிக்கு இடம்பெறும். இதற்கான நாடக தெரிவுகள் சமீபத்தில் இடம்பெற்றன.

சர்வதேச பொம்மலாட்ட மற்றும் கவிதைப் போட்டி தினம் இம் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இதனை முன்னிட்டு விசேட வைபவம் ஒன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் எதிர்வரும் 24 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவுகள் பலமான நட்புறவாக மாறியுள்ளது – ஜப்பான் பிரதமர்

சென் பிரன்ஸிஸ்கோ மாநாட்டில் பலப்படுத்தப்பட்ட ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையிலான நட்புறவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் புதிய பரிமாணத்தை பெற்றிருப்பதுடன், அது நம்பிக்கையும் பலமும் மிக்க நட்புறவாக மாறியிருப்பதாக ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்தார்.

ஜப்பானுக்கு அரசமுறை பயணமொன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேவினால் நேற்று விசேட இராப்போசன விருந்து வழங்கப்பட்டது.

டோக்கியோ நகரில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கும்போதே ஜப்பானிய பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான முதலீட்டு மற்றும் ஒத்துழைப்பு நிகழ்ச்சித் திட்டங்களை மேலும் பலப்படுத்துவதற்கு கடந்த சில தினங்களாக இடம்பெற்ற கலந்துரையாடல்களில் பல்வேறு உடன்பாடுகளுக்கு வரமுடிந்திருப்பதாக ஜப்பானிய பிரதமர் தெரிவித்தார்.

ஜப்பான் நாட்டை இலங்கை தனது நெருங்கிய நண்பராக கருதி செயற்பட்டுவருவதுடன், எதிர்காலத்திலும் இந்த உறவுகளை அனைத்து துறைகளிலும் மேம்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இலங்கையின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பை வழங்கும் முக்கிய நாடாக ஜப்பான் இருப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , ஜப்பானிய மக்கள் குறித்து இலங்கை மக்களிடம் மிகுந்த மதிப்பு உள்ளதாக தெரிவித்தார்.

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜப்பானிய பிரதமர் வாழ்த்துத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் இலங்கையில் மிகவும் பிரபல்யமான தொலைக்காட்சி நாடகமான ஒஷின் தொலைக்காட்சி நாடகத்தொடரில் ஒஷினின் பாத்திரத்தை ஏற்றிருந்த தொலைக்காட்சி நாடகக்கலைஞர் உள்ளிட்ட குழுவினரும் கலந்துகொண்டனர்.

தனியார் பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில்

நீர்கொழும்பு – கொழும்பு தனியார் பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று (15) காலை முதல் இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நீர்கொழும்பு – கொழும்பு தனியார் பேருந்து ஊழியர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்டுகிறது.

தாக்குதல் மேற்கொண்ட நபரை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கும் வரை வேலைநிறுத்தில் ஈடுபடுவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

கொள்கலனில் இருந்து 84 இலட்சத்திற்கும் அதிகமான பொருட்கள் மீட்பு

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் எடுத்துவரப்பட்ட ´கிளைபோசெட்´ 1000 கிலோகிராமினை பேலியகொட புதிய சுங்க தளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கொள்கலனில் இருந்து 100 கிராம் கொண்ட ´கிளைபோசெட்´ 10,000 பாக்கெட்கள் மீட்கப்பட்டதாக சுங்க திணைக்களம் தெரிவிக்கின்றது.

அத்துடன் குறித்த கொள்கலனில் இருந்து 350 கிராம் மூக்குப்பொடி, 520,000 பீடிகள் மற்றும் 600 பதாணிகளும் மீடகப்பட்டதாக சுங்க திணைக்களம் தெரிவிக்கின்றது.

இவை அனைத்தும் சுமார் 84 இலட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 2 =

*