;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (16.03.2018)

0

தீ விபத்தினால் நீர் விநியோகம் துண்டிப்பு

காலி மாநகர சபைக்கான நீர் வழங்கல் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

காலி வக்வெல்ல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீவிபத்து காரணமாக நீர் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக காலி மாவட்ட பொறியியலாளரான எம்.கே. லெச்டி தெரிவித்துள்ளார்.

கால நிலை

இலங்கையின் மேற்கே அரேபியக் கடலில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் நலிவடைந்து அப்பால் நகர்ந்து வருகிறது.

இதன் காரணமாக தாழமுக்கத்தின் விளைவுகள் இலங்கையின் மீதும், மேற்குக் கடலின்; மீதும் செலுத்தும் தாக்கம் குறைவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது..

இன்றைய தினம் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பெரும்பாலான பாகங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம்.

மத்திய, வடமேல் மாகாணங்களிலும், அனுராதபுரம் மாவட்டத்திலும் 50 முதல் 75 மில்லி மீற்றர் வரையான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என திணைக்களத்தின் வானிலை அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீரிழிவு நோயாளர்கள் பயன்படுத்தும் உபகரணங்களின் விலையை ஒழுங்குறுத்த நடவடிக்கை

நீரிழிவு நோயாளர்கள் பயன்படுத்தும் உபகரணங்களின் விலையை ஒழுங்குறுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறைஅமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.

நீரிழிவு நோயாளர்களின் இரத்தத்திலுள்ள சீனியின் மட்டத்தை அளவிடுவதற்காக பயன்படுத்தப்படும் குளுக்கோஸ் ஸ்ட்ரிப்ஸ் முதலான கருவிகளின் விலை மட்டங்கள் ஒழுங்குறுத்தப்படும்.

ஒரு பக்கெட் குளுக்கோஸ் ஸ்ட்ரிப்ஸின் விலை ஆயிரத்து 500 ரூபாவுக்கும் இரண்டாயிரத்து 500 ரூபாவுக்கும் இடைப்பட்டதாக அமைந்துள்ளது.

புற்றுநோயாளர்கள் பயன்படுத்தும் மருந்து வகைகளின் விலையை குறைக்கவும் எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

உலக சந்தோஷ அறிக்கையில் இலங்கை முன்னேற்றம்.

ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம், இலங்கை மக்கள் கடந்த ஆண்டை விட மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் 156 நாடுகள் பட்டியலிடப்பட்டன.

இதில் பின்லாந்து முதலிடம் பெற்றது. நோர்வே, டென்மார்க் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றிருந்தன. கடந்த ஆண்டு 120வது இடத்தில் இருந்த இலங்கை இம்முறை 116ஆவது இடத்திற்கு முன்னேறியது.

இதில் இந்தியாவை விட இலங்கை முன்னேற்றகரமான நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

உலக சந்தோஷ அறிக்கை பல விடயங்களின் அடிப்படையில் தொகுக்கப்படுகிறது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி, தனிநபர் வருமானம், சமூக உதவிகள், ஆரோக்கியமான ஆயுட்காலம், சமூக சுதந்திரம், நன்கொடை வழங்கும் தன்மை, ஊழல் இல்லாத நிலை முதலான காரணிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − 16 =

*