பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (16.03.2018)

நேர்முகப் பரீட்சையின்மூலம் ஆட்சேர்க்கப்படவுள்ள பதவி வெற்றிடம்
இலங்கை உள்நாட்டலுவல்கள் அமைச்சில், நிர்வாக சேவையின் மூன்றாம் வகுப்பிற்கான சட்ட அலுவலர் பதவிக்காக நேர்முகப் பரீட்சையின் மூலம் ஆட்சேர்ப்பு நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசால் வாராந்தம் வெளியிடப்படும் வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் இன்றைய தினம் வெளியிடப்பட்ட வர்த்தமானியிலேயே இந்த பதவி வெற்றிடத்திற்கான ஆட்சேர்ப்பு கோரப்பட்டுள்ளது.
குறித்த ஆட்சேர்ப்பானது கட்டமைப்பு ரீதியான நேர்முகப்பரீட்சையின்மூலம் இடம்பெறும் என்பதுடன் அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்படும் நேர்முகப் பரீட்சை சபையினால் நடாத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இதன்படி கட்டமைப்பு ரீதியான நேர்முகப் பரீட்சைப் பெறுபேறுகளின்படி உயரிய புள்ளிகளைக் பெற்றுக்கொண்ட போட்டியாளர் குறித்த வெற்றிடத்திற்கு ஆட்சேர்க்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பதவிக்கான கல்விசார் தகைமையாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றின்றிலிருந்து சம்பந்தமான பட்டமொன்றை பெற்றிருத்தல் அல்லது உயர் நீதிமன்றமொன்றில் சட்டத்தரணியாக சத்தியம் செய்திருத்தல் என்பன முக்கியப்படுத்தப்பட்டுள்ளது.
பேஸ்புக் பாவனையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை; மீறினால் இதுதான் நடக்கும்
பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் குற்றம் புரிவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றவியல் சட்டத்தின்கீழேயே இந்த தண்டனை வழங்கப்படவுள்ளது.
சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் குற்றசெயல்கள் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க முடியும் என இலங்கை சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இந்த சமூக வலைத்தளக் குற்றங்களுடன் தொடர்புடையவர்களை எந்த நேரமும் கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான யூ.ஆர்.டி சில்வா, சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்கள் தொடர்பில் கருத்து வெளியிடும்போது,
”சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு குற்ற விசாரணைத் திணைக்களம் தனியாக ஒரு பிரிவை அமைத்துள்ளது” என்றார்.
கொழும்பு லோட்டஸ் வீதிக்கு தற்காலிகமாக பூட்டு
கொழும்பு லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.
நில அளவைத் திணைக்கள ஊழியர்கள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாகவே இந்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இணையத்தள கொடுக்கல் வாங்கல் தொடர்பில் புதிய சட்டம்
இலங்கையில் இணையத்தளத்திள் ஊடாக மேற்கொள்ளப்படும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் புதிய சட்ட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சட்ட திட்டத்திற்கான வேலைத்திட்டத்தை நுகர்வோர் அதிகாரசபை முன்னெடுப்பதாக கூறப்பட்டுள்ளது.
ஈ-கொமெஸ் எனப்படும் இணையத்தள வர்த்தகம் தொடர்பான முறையான சட்டங்கள் இலங்கையில் இல்லாமல் இருப்பது பாரிய குறைபாடாக கருதப்படுகிறது.
இதன்படி இந்த நடவடிக்கை, தற்சமயம் அதிகரித்துவரும் இணையத்தள வர்த்தகத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.