;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (17.03.2018)

0

இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கு தண்டனை வழங்கப்படுவதில்லை- இது ஆபத்தானது

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கான தண்டனைகள் வழங்கப்படாமை, மிகவும் ஆபத்தானது என்று யுத்தக்குற்றங்களுக்கான அமெரிக்காவின் முன்னாள் விசேட தூதுவர் ஸ்டீவன் ரெப் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்று வருகின்ற 37வது மனித உரிமைகள் மாநாட்டின் உபகுழு கூட்டம் ஒன்றில் கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இந்த நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தது. கடந்த காலங்களில் குற்றங்களைப் புரிந்த பலர் தண்டனைகளில் இருந்து தப்பிக் கொள்ளும் நிலைமை அதிகம் உள்ளது.

அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள், பாதுகாப்பு மற்றும் பொலிஸ் அதிகாரிகள் போன்றோர் பாரிய அளவில் மனித உரிமை குற்றங்களில் ஈடுபடுகின்ற போதும், அவர்களுக்கு சட்ட ரீதியான தண்டனை வழங்கப்படுவதில்லை.

இதன் விளைவுகளாலே முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாத தாக்குதல்கள் உள்ளிட்ட பல வன்முறைகள் இடம்பெற்றன.குற்றங்களைப் புரிந்துவிட்டு தப்பிக் கொள்வதற்கான வழிகள் இருக்கின்றன என்பதை வன்முறையாளர்கள் அறிந்திருக்கின்றனர்.

இந்த நிலைமையை மாற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், தண்டனை வழங்கப்படாமை மிகப்பெரிய பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் வி.பி.என் செயலி தொடர்பாக வெளியாகின அதிர்ச்சித் தகவல்

இதுவரையில் வி.பி.என் செயலியை எட்டு லட்சத்து எண்பதாயிரம் பேர் பயன்படுத்தியுள்ளதாக சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவிகின்றனர்.

இந்த வி.பி.என் செயலியை எட்டு லட்சத்து எண்பதாயிரம் பேர் பயன்படுத்தியுள்ளதாகவும். இதன் காரணமாக இலங்கையர்களின் இலட்ச்சக்கணக்கான தரவுகள் பாதுகாப்பற்றதாக மாறிய நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தகவலை சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

உங்களது தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால் உங்கள் கையடக்கத் தொலைபேசியில் உள்ள குறித்த வி.பி.என் செயலியை அழித்து விடுமாறு அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இதன் மூலம் வி.பி.என் செயலியைப் பயன்படுத்தி சமூக வலைத்தள பாவனையில் ஈடுபட்ட இலங்கையர்களுக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக் காட்டப்படுகிறது.

யாழ். கடலில் இயேசு; 40 வருடங்களின் பின் நிகழ்ந்த சம்பவம்

தவக்காலத்தை முன்னிட்டு 40 வருடங்களின் பின் யாழ்ப்பாணக் கடலில் இயேசுவின் திருப்பாடுகளின் காட்சி நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். குருநகர் கடலில் குறித்த இயேசுவின் திருப்பாடுகளின் காட்சி நேற்று இடம்பெற்றுள்ளது.

இப்பிரதேசத்தில் 1970ஆம் ஆண்டு காலப்பகுதியில் கடல் வழியே திருப்பாடுகளின் காட்சி வழக்கமாக நடைபெற்றிருக்கிறது.

இந்த நிலையில் சுமார் 40 வருடங்களின் பின் திருப்பாடுகளின் காட்சி நேற்று இடம்பெற்றுள்ளன.
இந்த நிகழ்வு குருநகர் பங்குத் தந்தை எம்.வி.இ. இரவிச்சந்திரன் அடிகளாரின் தலைமையில், நாடகம், அரங்கியல் ஆசிரியர் இம்மானுவல் பிரபாவின் நெறிப்படுத்தலில் குருநகர் யோசப்வாஸ் இளையோர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டது.

இந்த திருப்பாடுகளின் காட்சியை பார்க்க பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதுடன் ஆசியும் பெற்றனர்.

ரஷ்யா என்னை கௌரவப்படுத்தியுள்ளது: நாமல் ராஜபக்‌ஷ

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன கண்காணிப்பாளர் தான் அழைக்கப்பட்டமைக்கு கௌரவப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன கண்காணிப்பாளராக செயற்படுமாறு ரஷ்ய நாடாளுமன்ற தலைவர் அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு நன்றி தெரிவித்து நாமல் ராஜபக்‌ஷ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஷ்ய மக்கள் அற்புதமானவர்கள் எனவும் அவர்களை இன்னும் ஒரு சில நாட்களில் தான் சந்திக்கவுள்ளதாகவும் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிறுபான்மையினரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கையில் நீடித்த நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தவும், சிறுபான்மையினரை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரி நொக்ஸ் தேம்ஸ் தெரிவித்துள்ளார்.

மதம் மற்றும் சிறுபான்மையினர் தொடர்பான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் விஷேட ஆலோசகராகவும், மத சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச நிபுணராகவும் செயற்பட்டுவரும் நொக்ஸ் தேம்ஸ் (Knox Thames) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளை சந்தித்திருந்தார்.

குறித்த சந்திப்பு தொடர்பாக அவர் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கையில் காணப்பட்ட அடிப்படை உரிமைகளை ஊக்குவிப்பதற்கான அர்ப்பணிப்பில் தான் ஈர்க்கப்பட்டதாகவும் நொக்ஸ் தேம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, மத வழிப்பாட்டு தலங்களுக்கு சென்ற அவர், சமயத் தலைவர்களுடன் உரையாடல்களை நடத்தியதாகவும் அண்மையில், இடம்பெற்ற இனக்கலவரம் குறித்து கவனம் செலுத்தியதாகவும் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 4 =

*