;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (17.03.2018)

0

மன்னாரில் ஆங்கில டிப்ளோமா கற்கை நெறி வைபவ ரீதியாக ஆரம்பம்

கொழும்பில் உள்ள அக்குவாயினஸ் உயர் கல்வி நிறுவனத்தின் அனுசரனையுடன் மன்னாரில் உள்ள ஞானோதயம் சமய கல்விக்கான அமைப்புடன் இணைந்து மன்னாரில் இன்று சனிக்கிழமை(17-03-2018) காலை ஆங்கில டிப்ளோமா கற்கை நெறி வைபவ ரீதியாக ஆராம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மன்னார்-தாழ்வுபாடு பிரதான வீதியில் உள்ள ஞானோதய மண்டபத்தில் அருட்தந்தை யூட் கறோல் தலைமையில் இடம் பெற்ற ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மற்றும் விருந்தினர்களாக மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்தியன் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

இதன் போது குறித்த ஆங்கில டிப்ளோமா கற்கை நெறியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மற்றும் வடக்கில் ஏனைய மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களும் கலந்து கொண்டதோடு, மாணவர்களின் விசேட நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை மாணவர்களின் சீருடை தொடர்பில் மீண்டும் ஏற்பட்டுள்ள மாற்றம்

வரும் வருடம் முதல் பாடசாலை மாணவர்களுக்கு, மீண்டும் சீருடை துணிகளை நேரடியாக வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் சஜித் பிரேமதாச இதனை தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுத்து வந்த தொடர் கோரிக்கைகளையடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளில் பெரும் மோசடிகள் தொடர்ந்து வந்ததையடுத்தே, தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் சீருடைக்கு பதிலாக பற்றுச்சீட்டு முறையை அறிமுகப்படுத்தியது.

இந்த பற்றுச்சீட்டு முறையின் மூலம் சீருடைத் துணிகளை கொள்வனவு செய்வதில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக பெற்றோர் தெரிவித்து வருவதால், மீண்டும் நேரடியாக சீருடைத் துணிகளை வழங்க முடிவெடுத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சனத்தொகை கணக்கெடுப்பை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை மேற்கொள்ளத்திட்டம்

நாட்டின் சனத்தொகை கணக்கெடுப்பை இந்த ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

வீடுகள் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பத்தாண்டுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படுவதுடன், அடுத்து கணக்கெடுப்பு 2021ம் ஆண்டு மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மக்கள் தொகை, வீடுகளின் எண்ணிக்கை, கட்டிடங்களின் எண்ணிக்கை மற்றும் வீடுகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட பல தகவல்களை சேகரிப்பதற்கு இதன் மூல்ம எதிர்பார்க்கப்படுவதாக தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் கூறியுள்ளது.

மரக்கறி வகைகளின் விலைகளை உடனுக்குடன் அறிவிக்கும் வேலைத்திட்டம்

விவசாயிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் சந்தையில் விற்பனை செய்யப்படும் மரக்கறி வகைகளின் விலைகளை உடனுக்குடன் அறிவிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 66-66 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்வதன் மூலம் 23 மரக்கறி வகைகளின் விலைகளை அறிந்துகொள்ள முடியும்.

ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

கோட்டை நீதவான் கடற்படையைச் சேர்ந்த அட்மிரலுக்கு உத்தரவு

காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்கமூலம் வழங்குமாறு கோட்டை நீதவான் கடற்படையைச் சேர்ந்த அட்மிரல் ஆனந்த குருகேக்கு உத்தரவிட்டுள்ளார்.

2008ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் எட்டாம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 17ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாகவே எதிர்வரும் 23ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்கமூலம் வழங்குமாறு கோட்டை நீதவான் கடற்படையைச் சேர்ந்த அட்மிரல் ஆனந்த குருகேக்கு இவ்வாறு உத்தரவுபிறப்பித்துள்ளார்.

வாக்குமூலங்களை வழங்குமாறு 3 தடவைகள் விடுத்த கோரிக்கைகளையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் அறிவித்ததைத் தொடர்ந்து கோட்டை நீதவான் இந்த உத்தரவை வழங்கினார்.

சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் கடற்படையின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இரண்டு வீரகள் மீது விதிக்கப்பட்டுள்ள விளக்கமறியல் இம்மாதம் 22ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + five =

*