;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (18.03.2018)

0

அவசர கால நிலைமை நீக்கப்பட்டது..!!!

ஜப்பானுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு இலங்கையை வந்தடைந்துள்ளார்.

அத்துடன் நாட்டில் நிலவும் அவசர கால நிலைமையை நீக்குவதற்கான வர்த்தமானியிலும் ஜனாதிபதி கையெழுத்துட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவிக்கின்றது.

பேஸ்புக் கணக்குகளை முடக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை..!!

சமூக வலைத்தளங்கள் ஊடாக இனவாதம் மற்றும் மதவாத கருத்துக்களை வெளியிடும் பேஸ்புக் கணக்குகளை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான கணக்குகளை நிரந்தரமாக நீக்குவதற்கு பேஸ்புக் நிறுவனம் அரசாங்கத்திடம் வாக்குறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் விடுத்த கோரிக்கைகளுக்கமைய இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.அண்மையில் கண்டியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பேஸ்புக் நிறுவனத்திடம், அரசாங்கம் விடுத்த பல கோரிக்கைகளை பேஸ்புக் நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது.

எப்படியிருப்பினும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் பேஸ்புக் நிறுவனம் மற்றும் இலங்கை அரசாங்கம் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

வட மாகாணத்தைத் தவிர நாட்டின் ஏனைய பகுதிகளில் அடைமழை..!!

நாட்டின் பல பகுதிகளில் இன்றையதினம் இடியும் கூடிய மழை பெய்யும் என வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வட மாகாணத்தை தவிர ஏனைய பகுதிகளில் அடைமழை பெய்யும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

2 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். காலை நேரங்களில் கிழக்கு மாகாணத்திலும் பொலநனறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் மழை பெய்யும் என கூறப்படுகின்று.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பிரதேசங்களில் தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடும்.

மின்னலினால் ஏற்படுகின்ற விபத்துக்களை குறைத்து கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது

கண்டியிலுள்ள பள்ளிவாசல்களை தொடர்ந்தும் பாதுகாக்கும் பௌத்த துறவிகள்..!!

கண்டியில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களை அடுத்து இன முரண்பாடுகளை தவிர்க்கும் நடவடிக்கைகயில் அந்தப் பகுதி பௌத்த துறவிகள் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த வாரத்தில் கண்டியில் நிலவிய அசாதாரண சூழ்நிலையை அடுத்து, பள்ளிவாசல்களுக்கு தொடர்ந்தும் பௌத்த துறவிகள் பாதகாப்பு கொடுத்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் நடைபெற்ற விசேட பிரார்த்தனையின் போது பள்ளிவாசல்களில் பௌத்த துறவிகள் பாதுகாப்புக்காக சென்றுள்ளனர்.

கண்டியின் பல இடங்களில் ஏற்பட்ட வன்முறையின் பின்னர் மீண்டும் அவ்வாறான சம்பவங்கள் ஏற்படாமல் இருப்பதற்கான பௌத்த துறவிகள் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற மத வழிப்பாட்டின் போது எவ்வித வன்முறைகளும் ஏற்படாமல் இருப்பதற்காக பௌத்த துறவிகள் மற்றும் பொலிஸார் பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.

கண்டி மாவட்டத்தின் பல விகாரையின் தேரர்கள் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 − two =

*