;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (18.03.2018)

0

ஐ.தே.க. வின் மறு­சீ­ர­மைப்பு 31 ஆம் திக­திக்கு முன்னர்..!!

ஐக்­கிய தேசியக் கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கை­களை எதிர்­வரும் 31 ஆம் திக­திக்கு முன்னர் பூர்த்தி செய்­ய­வுள்­ள­தாக இளைஞர் விவ­கார மற்றும் தெற்கு அபி­வி­ருத்தி அமைச்சர் சாகல ரத்­நா­யக்க தெரி­வித்­துள்ளார்.

மாத்­தறை ஊறு­பொக்க பிர­தே­சத்தில் நேற்று நடை­பெற்ற நிகழ்­வொன்றின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்­துள்ளார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலின் பின்னர் கட்­சியை மறு­சீ­ர­மைப்­பது தொடர்பில் கவனம் செலுத்­தப்­பட்­டது என்றார்.

அது குறித்து பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­விற்கும் ,கட்­சியின் முக்­கி­யஸ்­தர்கள் சில­ருக்­கு­மி­டை­யி­லான சந்­திப்பு கடந்த மாதம் 23 ஆம் திகதி அலரி மாளி­கையில் நடை­பெற்­றது. அதன்­போது கட்­சியின் புதிய தலை­மைத்­துவ சந்­த­தியை உரு­வாக்­கு­வதில் விசேட கவனம் செலுத்­தப்­பட்­டது.

ஆகவே அதனை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கைகள் தொடர்பில் குழுக்­களும் அமைக்­கப்­பட்­டன. எனவே அக்­கு­ழுக்­களின் ஆலோ­ச­னை­க­ளுக்கு அமை­வாக மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கைகள் இடம்­பெ­ற­வுள்­ள­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க கடந்த வெள்­ளிக்­கி­ழ­மையும் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரைச் சந்தித்து மறுசீரமைப்பு நடவடிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கையில்லா பிரேரணையில் நாளை கையெழுத்து..!!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகக் கொண்டுவரத் தீர்மானித்துள்ள, நம்பிக்கையில்லாப் பிரேரணையில், ஒன்றிணைந்த எதிரணியினர் நாளைய தினம் கையெழுத்து இடவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

நாளை (19) மற்றும் நாளை மறுதினம் (20), நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில், கலந்துரையாடல் ஒன்றை நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர், சிசிர ஜயகோடி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், சுதந்திரக் கட்சியிலுள்ள அனைத்து அமைச்சர்களும், குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் மையெழுத்திடத் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

​இந்திய வர்த்தகர் இலங்கையில் கைது..!!

சுற்றுலா விசாவில் இலங்கை வந்து, வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்தியப் பிரஜை ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றை தினம் (17), மூதூர் – பட்டித்துறையில் வைத்து, துணி வியாபாரம் மேற்கொண்டு வந்தநிலையில், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை இன்று (18), மூதூர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகப், பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

ரயில் கட்டணம் உயர்வு?..!!

அடுத்த மாதம் முதல் ரயில் கட்டணத்தை 15 சதவீதம், உயர்த்தவுள்ளதாக, ரயில் நிலைய சேவை அதிகாரி, எம். அபேவிக்கிரம தெரிவித்துள்ளார்.

2008ஆம் ஆண்டு, 20 சதவீதத்தால் ரயில் கட்டணத்தை அதிகரிக்க முற்பட்டு, அத்தீ​ர்மானம் நிறைவேற்றப்படாத நிலையில், இவ்வாண்டு 15 சதவீதத்தால் அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக மேலும் அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen + twelve =

*