;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (18.03.2018)

0

“முக்கிய பதவிகள் இம்மாதத்திற்குள் மாற்றம்”..!!

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி கட்சியின் முக்கிய பதவிகள் இம்மாதத்திற்குள் மாற்றம் செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்ததாக ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதி பொதுச்செயலாளரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

அத்துடன் கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு தன்னை நியமிக்குமாறு பெரும்பாலானோர் கட்சியின் தலைமையிடம் கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து வினவிய போதே அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கேசரிக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமது பாவங்களை போக்குவதற்காகவே நம்பிக்கையில்லா பிரேரணை..!!

தமது ஊழல்மோசடி மறைப்பதற்காகவும் தமது பாவங்களை போக்குவதற்காக கூட்டு எதிர்க்கட்சியினர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர முனைகின்றது. இதன்படி நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்தால் அதனை தோற்கடித்து விட்டு பாரிய வெற்றியை ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுக்கொள்ளும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி பொதுச்செயலாளரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

அத்துடன் சுதந்திரக் கட்சியினரும் நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்கவே முனைவர். என்றாலும் அதற்கு மீறி சுதந்திரக் கட்சியினர் வாக்களித்தால் வாக்களிப்பர்கள் யார் என்பதனை பார்த்து அதன்பின்னர் தீர்மானம் எடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் வினவிய போதே அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கேசரிக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டில் இனவாதத்தை தோற்றுவித்தது யார்.?..!!

தமிழ் மற்றும் சிங்கள இனங்களுக்கிடையே இனவிரோதத்தினை உருவாக்கி நாட்டில் 30 வருடகால யுத்தத்தினை ஐக்கிய தேசிய கட்சியே தோற்றுவித்தது. விடுதலை புலிகள் இயக்கத்தினை தோற்றுவித்தவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஜெ.ஆர். ஜெயவர்தன என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பிணர் பந்துல குணவர்தன

இதன் தொடர்ச்சியினை தற்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், சுய நலன்பேணுக்காக பெயரளவு எதிர்கட்சியாக செயற்படும் மக்கள் விடுதலை முன்னணியும் பின்பற்றி வருகின்றது. நாட்டில் இனவாதத்தினை தோற்றுவித்தது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின குடும்பத்தினரே என்று மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிட்டுள்ளமை வேடிக்கையாகவுள்ளது என தெரிவித்தார்.

இலங்கையில் தொடர்ச்சியாக இடம் பெற்றுவருகின்ற இனகலவரங்கள் பற்றியும், அதன் தோற்றுவாய்கள் தொடர்பில் தெளிவுப்படுத்துகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேர்தல் ஆணையகத்தின் மீது சைபர் தாக்குதல்..!!

ரஷ்யாவின் தேர்தல் ஆணையகத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தளத்திற்கு சைபர் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்புகள் ஆரம்பிக்கப்பட்ட போதே இந்த சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 2 =

*