;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (19.03.2018)

0

சுற்றுலாப்பயணிகளுக்கு வழிகாட்டிகளை வழங்கும் நோக்கில் மனிதவள பயிற்சி அபிவிருத்தி வேலைத்திட்டம்

தென் மாகாணத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சரியான வழிகாட்டிகளை வழங்கும் நோக்கில் மனித வள பயிற்சி அபிவிருத்திக்கான வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு றுஹுணு சுற்றுலா செயற்பாட்டு அணி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதன் கீழ் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், பல்வேறு மொழி தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது.

இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனமும் இணைந்து மாதாந்த கற்கை நெறிகள் மூலம் இத்துறையில் புதிதாக பிரவேசிப்பவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட உள்ளது.

இதன் மூலம் சுமார் 400 பேர் தொழில் வாய்ப்புக்களைப் பெறுவார்கள் என்று றுஹுணு சுற்றுலா செயலணி தெரிவித்துள்ளது.

காலநிலை

நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான காலநிலை நாளை முதல் அடுத்த சில நாட்களுக்குள் படிப்படியாக குறையுமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்கு , மத்திய , சப்ரகமுவ , தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையிலான கடற்கரையோரப்பகுதிகளில் மாலை மற்றும் இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

சூரிய சக்தி அதிகார சபைக்கு புதிய கட்டடம்

சூரிய சக்தி அதிகார சபைக்கு புதிய கட்டிடமொன்று அமைக்கப்படவுள்ளது.

சுற்றாடலுக்குப் பொருத்தமான வகையில் அமைக்கப்படவுள்ள இந்தக் கட்டிடத்திற்கு 550 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வருடம் டிசம்பர் மாதம் அளவில் இதன் நிர்மாணப் பணிகளைப் பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இன்றுவரை தமிழ் மக்களை பின்தள்ளப்பட்ட மக்களாகவே அரசு பார்த்துக்கொண்டிருக்கின்றது.

இன்றுவரை தமிழ் மக்களை பின்தள்ளப்பட்ட மக்களாகவே அரசு பார்த்துக்கொண்டிருக்கின்றது என்பது இன்றைய கால நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றது என்றும் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் அண்மையில் இடம்பெற்ற வாழ்வாதாரம் வழங்கும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்

முல்லைத்தீவு மாவட்டத்தில் போரால் பாதிக்கப்பட்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்டு 9 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் இன்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கொடுக்கவேண்டிய தேவை இருக்கின்றது என்றால் இந்த அரசாங்கம் ஏன் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான உதவியினை செய்யவில்லை என்ற கேள்வி எழுகின்றது.

கடந்த போரின்போது பாதிக்கப்பட்ட பெண்கள் தலைமைதத்துவ குடும்பங்கள் பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள், பெற்றோர்களை இழந்த பிள்ளைகள், மாற்று திறனாளிகள் என்ற தலைப்பின் கீழ்தான் இங்கே உதவிகள் வழங்கப்படுகின்றன ஒன்பது ஆண்டுகள் ஒரு அராசங்கம் ஒரு இனத்தை ஒடுக்கிக்கொண்டிருப்பதை இதன்மூலம் காணக்கூடியதாக இருக்கின்றது.

9 ஆண்டுகளாக இந்த மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்விற்கு திரும்ப முடியாத நிலையில் அரசு இருக்கின்றது என்பதுதான் உண்மை முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பிரதேசத்திலும் காணிகள் விடுபடவில்லை இன்னும் மக்களின் காணிகள் படைத்தரப்பின் வசமே உள்ளது தென்னிலங்கையினை சேர்ந்தவர்கள் மாறாக அபகரித்துக்கொண்டே செல்கின்றார்கள்.

போர்காலத்தில் மக்கள் தன்னிறைவு பொருளாதாராத்தில் வாழ்ந்தார்கள் ஆனால் இப்போது மக்களின் குடும்ப பொருளாதாரத்தின் பின்னடைவினை காணக்கூடிய நிலையில் காணப்படுகின்றன இதனை அரசின் வறுமை புள்ளிவிபரம் எடுத்துக்காட்டுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டம் அதிகளவில் விவசாயத்தினை கொண்ட மாவட்டம். பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கான விவசாய நடவடிக்கையினை செய்யமுடியாமல் இருக்கும் இந்த மக்களின் வாழ்வாதார மானிய நடவடிக்கைகளை அரசாங்கம் எப்போதே மேம்படுத்தி இருக்கவேண்டும்.

நல்லாட்சி என்று சொல்லிக்கொண்டு வந்த அரசாங்கம் கூட இவ்வளவு காலமும் பாராமுகமாக இருக்கின்றது.

இவ்வாறு போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் தங்கள் பொருளாதாரத்தை கட்டி எழுப்பும் வரையில் மாதாந்தம் ஒரு கொடுப்பனவினை அரசு மேற்கொண்டிருக்கவேண்டும் வறுமையில் முதல்நிலையில் முல்லைத்தீவு மாவட்டம் இருந்தது என்றால் இது யாருடைய பிழை அரச நிர்வாகத்தின் பிளை இவ்வளவு காலமாக இருந்துவிட்டு தற்போது வந்து ஒரு ஜம்பதாயிரம் ரூபா பெறுதியான பொருட்களை வழங்குவதன் மூலம் இதனை வைத்துக்கொண்டு மக்களின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப முடியாது.

இதே நிலை தென்னிலங்கை மக்களுக்கு என்றால் அரச தலைவரில் இருந்து அனைவரும் ஓடிச்சென்று காப்பாற்றுகின்றார்கள் ஆனால் வடக்கில் உள்ள தமிழ்மக்களுக்கு இந்த நிலை ஏன் இந்த பாராபட்சத்தை காண்பிக்கின்றார்கள்.

எங்கள் மக்களின் தேவைகளை உடன் உணர்ந்து நிறைவேற்றவேண்டும் வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் மதித்து மக்களின் நிலமைகளை உணர்ந்து ஒரு திட்டத்தை கொண்டுவந்து நிவாராணத்தை வழங்கி மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த வழிவகுக்கவேண்டும்.

இன்றுவரை தமிழ் மக்களை பின்தள்ளப்பட்ட மக்களாகவே அரசு பார்த்துக்கொண்டிருக்கின்றது என்பது இன்றைய கால நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றது என்றும் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × three =

*