;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (20.03.2018)

0

அரசாங்க வனப்பகுதியில் மரங்களை வெட்டியோருக்கு நோ்ந்த அவலம்

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொத்மலை நீர்தேகத்திற்கு அருகில் காணப்படும் அரசாங்க வனப்பகுதியின் எல்லைப்பகுதியில் காணப்படும் பலா மரங்களை சட்டவிரோதமாக இனந்தெரியாவர்கள் தரித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் கிடைத்த இரகசிய தகவலையடுத்து 18.03.2018 மாலை அவ்விடத்திற்கு சென்ற நாவலப்பிட்டி பொலிஸாரை கண்டு இனந்தெரியாதவர்கள் தப்பியோடியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

அதே நேரத்தில் தரிக்கப்பட்டிருந்த பலா மர குற்றிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

தப்பியோடிய சந்தேக நபர்களை தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

மக்களுக்கு சிறப்பான வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதில் அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளதாக பிரதமர் தெரிவிப்பு

கொழும்பு மாநகர சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக தெரிவான அங்கத்தவர்கள் நேற்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்.

சத்தியப்பிரமாண வைபவம் பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் தலைமையில் நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்றது. அவர்கள் முன்னிலையில் 60 பேர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

எதிர்காலத்தில் பொறுப்புக்களை மென்மேலும் சிறப்பாக நிறைவேற்றி மக்களுக்கு உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப் போவதாகத் பிரதமர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் பத்தாண்டு காலத்திட்டத்தை அமுலாக்க வேண்டும். மாநகர சபை எல்லைக்குள் டெங்கு நோயை ஒழிப்பதும் அவசியம்.

தொகுதிவாரியாக தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்கள் தத்தமது தொகுதிகளில் சிறப்பாக கடமையாற்ற வேண்டுமென பிரதமர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபையின் முதலாவது பெண் மேயராக சத்தியப்பிரமாணம் செய்த கொண்ட ரோஷி சேனாநாயக்கவும் உரையாற்றினார். ஐக்கிய தேசியக் கட்சி 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

புதிய உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சி அமைக்கும் நடவடிக்கை இன்றுமுதல்

புதிய உள்ளூராட்சி மன்றங்களின் அதிகார நிர்வாக நடவடிக்கைகள் இன்று (20) ஆரம்பமாக உள்ளது.

இன்றைய தினத்தில் இருந்து ஒரு மாத காலத்தில் உள்ளூராட்சி மன்றங்களை அமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரி 10ம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பெறுபேறுகளுக்கு அமைவாக அரசியல் கட்சிகளுக்கு சபைகளை அமைக்க முடியும்.

எவ்வாறாயினும் 50 வீதத்திற்கு அதிகமான அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளாத சபைகளில் ஆட்சியமைப்பதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களின் ஆணையாளர்களுக்கு அந்த இரகசிய வாக்கெடுப்பை நடத்துவதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

தேர்தல் நடத்தப்பட்ட 340 சபைகளில் 169 சபைகளுக்கு இரகசிய வாக்கெடுப்பு நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சி அதிகாரத்தைப் பெற்றுக் கொண்ட சபைகளுக்கு தலைவர்கள் மற்றும் உப தலைவர்களை நியமிக்கும் நடவடிக்கை நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னிலைவயில் இடம்பெற்றது.

அலரி மாளிகையில் இந்த பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது கொழும்பு மாநகர மேயராக ரோசி சேனாநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளதுடன், உதவி மேயராக மொஹமட் துல்பா மொஹமட் இக்பால் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × one =

*