;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (20.03.2018)

0

தமது வெற்றியால் அரசாங்கம் அதிர்ந்து போயுள்ளது

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றியால் அரசாங்கம் அதிர்ந்து போயுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.

அரசாங்கம் நிலைகுலைந்து போயுள்ளமை இன்று தௌிவாகியுள்ளது என்று அவர் கூறியுள்ளார். இந்த நிலையற்ற தன்மை காரணமாக நாட்டினுள் வேறு எதிர்பார்பார்ப்புகள் உருவாகிக் கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இம்முறை இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற சில மாவட்டங்களின் பொதுஜன பெரமுன வேட்பாளர்கள் பதவியேற்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று காலை இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன் தற்போது இருப்பது தமக்கு எதிரான அரசாங்கம் என்றும், அதனால் தமது அனைத்து செயற்பாடுகள் தொடர்பிலும் அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பயிர்ச்செய்கை கருவிகள் வழங்கி வைப்பு

வடமாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வாழ்வாதார விருத்தி மற்றும் அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் செயல் திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய,மற்றும் தோட்டச் செய்கை பயனாளிகளுக்கு பயிர்ச்செய்கை கருவிகள் வழங்கி வைக்கப்பட்டது.

நேற்றையதினம்(19-03-2018) திங்கட்கிழமை மன்னார் உயிலங்குளம் மாவட்ட பயிற்சி நிலையத்தில் வைத்து இந்த பயிர்ச்செய்கை கருவிகள் வழங்கி வைக்கப்பட்டது.

மன்னார் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 12.7 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 220 பயனாளிகளுக்கு ஒவ்வெருவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பயிர்ச்செயகை கருவிகள் மற்றும், இதர பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 11 பயனாளிகளுக்கும், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 7 பயனாளிகளுக்கும், மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவைச் சேர்ந்த 73 பயனாளிகளுக்கும், மடு பிரதேசச் செயலாளர் பிரிவைச் சேர்ந்த 123 பயனாளிகளுக்கும், முசலி பிரதேசச் செயலாளர் பிரிவைச் சேர்ந்த 4 பயனாளிகளுக்கும், குறித்த பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு குறித்த விவசாய உள்ளீடுகளை வழங்கி வைத்தார்.

இதன் போது வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிறிமுஸ் சிராய்வா,வடமாகாண சுகாதார அமைச்சாரின் செயலாளர் சந்திரையா ஆகியோர் இணைந்து தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளுக்கு குறித்த உள்ளீடுகளை வைபவ ரீதியாக வழங்கி வைத்தனர்.

குறித்த நிகழ்வில் மாகாண விவசாய பணிப்பாளர்,மன்னார் உதவி மாகாண பணிப்பாளர் உட்பட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கான பணிகள் டிசம்பரில்

எதிர்வரும் ஒவ்வொரு வருடமும் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கான அனைத்து பணிகளையும் டிசம்பர் மாதத்திற்குள் பூரத்தி செய்ய கல்வி அமைச்சு எதிர்பார்த்துள்ளது.

இதற்கமைவாக பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணி டிசம்பர் மாதம் பூர்த்தி செய்யப்படும்.

பரீட்சை ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் முதலாம் வாரத்தில் ஆரம்பிக்கப்படும். விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி உடனடியாக ஆரம்பிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்காக பரீட்சை பணிகளில் ஈடுப்படுத்தப்படும் சுமார் 30 ஆயிரம் ஆசிரியர்களை பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணியிலும் ஈடுப்படுத்த கல்வி அமைச்சும், பரீட்சை திணைக்களமும் தீர்மானித்துள்ளது.

ஆயுர்வேத திணைக்களம் அமைக்கப்படும் – அமைச்சர் ராஜித சேனாரத்ன

ஆயுர்வேத வைத்தியதுறை அபிவிருத்திக்காக சுகாதார திணைக்களத்தை போன்று ஆயுர்வேத திணைக்களம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆயுர்வேத மருந்து வகைகள் காலத்திற்கு ஏற்ற வகையில் புதிய உலகத்திற்கு பொருத்தமான வகையில் அமைக்கப்பட வேண்டும் என்று அமைச்ச்ர தெரிவித்தார்.

அனுராதபுரம் மாகாணசபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றும போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 − one =

*