;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (21.03.2018)

0

கண்டியில் பாதிக்கப்பட்டோருக்கு சலுகை வட்டியுடனான கடன்

இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல்வாரத்தில் கண்டி நிர்வாக மாவட்டத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட வர்த்தக நடவடிக்கைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக நிவாரணம் வழங்குவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதற்கமைவாக கண்டி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட இவ்வாறான வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட நிபந்தனை மற்றும் நியமனங்களுக்கு உட்பட்டதாக 2சதவீத நிவாரண வட்டி அடிப்படையின் கீழ் கடன் வழங்க அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அத்வெல என்ற கடன்திட்டத்தின் மூலமே குறித்த கடனை வழங்குவதற்காக அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன்படி, அரசதொழில் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல வழங்கிய ஆவணங்களுக்கு அமைச்சரவை இந்த அங்கீகாரத்தினை அளித்துள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியோர்க்கு சுய வேலைவாய்ப்பு உதவி

வெளிநாட்டுத் தொழிலினை நிறைவு செய்து மீண்டும் நாடு திரும்பிய தொழிலாளர்களுக்கு காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சுய வேலைவாய்ப்பு உதவித்திட்டதொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினாலேயே இந்த நடைமுறை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் காலி மாவட்ட பயிற்சி நிலையத்தில் அண்மையில் நடைபெற்ற சுய வேலைவாய்ப்பு உதவித்திட்ட நிகழ்வில் காலி மாவட்டத்தில் 10 பயனாளிகளுக்கு ரூ. 187,292 உதவித் தொகை வழங்கப்பட்டது.

மாத்தறை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் 33 பயனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்பு உதவித்திட்டதொகையாக 711,599.87 ரூபா வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஆகக்கூடுதலாக ஆரம்பகட்ட வேலைத்திட்டத்திற்கு 25000 ரூபாய் வழங்கப்படுகின்றது.

இத்தகைய வேலைத்திட்டங்கள் நாடுதிரும்பியுள்ள தொழிலாளர்களை பொருளாதார ரீதியில் வலுப்படுத்தவும் சமூகத்தில் அவர்களை சமூகத்துடன் ஒன்றிணைத்துக்கொள்ளவதற்காகவும் மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

ஏற்றுமதி உற்பத்தி வலயத்திற்கு 8 தீயணைப்பு வாகனங்கள்

ஏற்றுமதி உற்பத்தி வலயத்திற்கு ஜப்பான் அரசாங்கத்தினால் 8 தீயணைப்பு வாகனங்கள் வழங்கப்படவுள்ளன.

இது தொடர்பான உடன்படிக்கை இலங்கை முதலீட்டு சபையின் தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.

இதன்போது இலங்கையிலுள்ள ஜப்பானுக்கான தூதுவர் கெனிச்சி சுகனுமா மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் பணிப்பாளர் துமிந்த ஆரியசிங்க ஆகியோர் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

இலங்கை முதலீட்டு சபைக்குட்பட்ட 8 ஏற்றுமதி தயாரிப்பு வலயத்திற்காக 8 தீயணைப்பு வாகனங்களை பெற்றுக்கொள்வதற்காக 90778 அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்க ஜப்பான் அரசாங்கம் உடன்பட்டுள்ளது.

பாவனைக்கு உதவாத 9000 கிலோவுக்கு மேற்பட்ட அரிசி அழிப்பு

உலர் உணவுக்கென கொண்டு வரப்பட்ட பாவனைக்கு உதவாத 9000 கிலோவுக்கு மேற்பட்ட அரிசி அழிக்கப்பட்டன.

இவற்றின் பெறுமதி 7 லட்சம் ரூபாவாகும்.

வில்கமுவ பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தினால் உலர் உணவு திட்டத்தின் கீழ் விநியோகிப்பதற்காக இந்த அரிசி கொண்டு வரப்பட்டது.

இவை பாவனைக்கு பொருத்தமற்றது என நுகர்வோரினால் பொது மக்கள் சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

அரிசி மாதிரியை பரிசோதனை செய்த பின்னர் இவற்றை லக்கல பல்லேகம நீதவான் நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

நீதவான் உத்தரவின் பேரில் அரிசியை வில்கமுவ பிரதேசத்தில் அழிக்க தீர்மானிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − 16 =

*