;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (22.03.2018)

0

ரோஸி சேனாநாயக்க கடமைகளை பொறுப்பேற்றார்

ரோஸி சேனாநாயக்க கொழும்பு மாநகர சபையின் மேயராக சற்றுமுன்னர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

கொழும்பு மாநகர சபையின் முதலாவது பெண் மேயர் ரோஸி சேனாநாயக்க என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டம்

கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டம் ஒன்று இன்று நடைபெற உள்ளது.

இன்று நண்பகல் 12.00 மணியளவில் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினால் சமர்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் தொடர்பாக இதன்போது அவதானம் செலுத்தப்பட உள்ளது.

இதுதவிர பிணைமுறி மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் மீதான விவாதம் சம்பந்தமாகவும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பேசப்பட உள்ளது.

இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக சமர்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை சம்பந்தமாக கலந்துரையாடுவதற்கு ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று கூடவுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதில கூறினார்.

உலக நீர் தினத்தை முன்னிட்டு குடிநீர் பவுசர்கள் விநியோகம்

உலக நீர்தினத்தை முன்னிட்டு மாத்தறை, மொனராகலை மற்றும் கிழக்கு பிரதேசத்திற்கான குடிநீர் பவுசர் விநியோகிக்கும் நிகழ்வு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் நடைபெற்றது.

நீர்வழங்கல் அமைச்சில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் வழங்கப்பட்ட நீர் பவுசர்கள் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபையின் ஒருங்கிணைப்பு சேவை மத்திய நிலையங்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சகலருக்கும் பாதுகாப்பான தூய குடிநீரை வழங்கும் நோக்கில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் குடிநீரில் கடல் நீர் கலந்துள்ள பகுதிகளில் குழாய் மூலம் குடிநீர் கிடைக்கப்பெறாத பகுதிகளுக்கும் குடிநீர் பவுசர்களை பெற்றுக்கொடுப்பதற்கு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அமைச்சர் ரவூப் ஹக்கீமின் ஆலோசனைக்கமைவாக நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சு இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கும் பவுசர் வழங்கும் கருத்திட்டத்திற்காக 235 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்துள்ளது.

முன்னர் குருநாகல், புத்தளம், அம்பாறை மட்டக்களப்பு, திருகோணமலை, பதுளை, ஹம்மாந்தோட்டை, பொலன்னறுவை, காலி மற்றும் கொழும்பு முதலான மாவட்டங்களுக்கான குடிநீர் பவுசர்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இன்று பாகிஸ்தான் செல்கிறார் சிறிலங்கா அதிபர்

பயணமாக இன்று பாகிஸ்தானுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

பாகிஸ்தானின் தேசிய நாள் நிகழ்வுகளில் பிரதம விருந்தினராகப் பங்கேற்குமாறு, அதிபர் மமூன் ஹுசேன் விடுத்த அழைப்பின் பேரிலேயே சிறிலங்கா அதிபர் அங்கு செல்லவுள்ளார்.

எதிர்வரும் 24ஆம் நாள் வரை பாகிஸ்தானில் தங்கியிருக்கும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பாகிஸ்தான் அதிபர் மமூன் ஹுசேன், பிரதமர் சஹிட்கான் அப்பாசி ஆகியோருடன் பேச்சுக்களையும் நடத்தவுள்ளார்.

அத்துடன், இரண்டு நாடுகளுக்கு இடையிலும், பாதுகாப்பு, மூலோபாயக் கற்கைகள், கல்வி முகாமைத்துவம், வெளிவிவகாரத் துறைகளிலான நிபுணத்துவ ஆற்றலைக் பகிர்ந்து கொள்வதுதொடர்பான புரிந்துணர்வு உடன்பாடுகளிலும் இந்தப் பயணத்தின் போது கையெழுத்திடப்படவுள்ளது.

கிழக்கிற்கு தமிழரே முதல்வர்; விட்டுகொடுப்புகளுக்கு தயார் – துரைரட்ணம்

கிழக்கு மாகாணத்திற்கு எதிர்காலத்தில் தமிழர் ஒருவரை முதலமைச்சராக நியமிக்க எந்த விட்டுக்கொடுப்புகளுக்கும் தமது கட்சி தயாராக இருப்பதாக ஈ.பீ.ஆர்.எல்.எப் கட்சியின் கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் இரா.துரைரட்ணம் கூறியுள்ளார்.

தமிழ் தலைமைகளுக்குள் பிளவுகள் காணப்படுமானால், தேசிய கட்சிகளுக்கு ஆதரவு வழங்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதையே உள்ளுராட்சிமன்ற தேர்தல் மூலம் மக்கள் வெளிப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவில் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு சார்பில் வெற்றிபெற்ற உறுப்பினர்களின் சத்தியபிரமாண நிகழ்வு ஏறாவூர் பற்றில் நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்றது.

இதில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் துரைரட்ணம்,

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சிமன்ற தேர்தலில், தமிழ் தலைமைகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதையே தமிழ் மக்களின் வாக்குகள் வெளிப்படுத்தி நிற்பதாக குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − eight =

*