;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (22.03.2018)

0

இலங்கை ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடித்தடை; விரைந்து செயற்படுத்த உத்தரவு

இலங்கை ஜனாதிபதி உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை ஒன்றை விதித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்து தெரியவருவதாவது,

இலங்கையின் மேற்கே கம்பஹா மாவட்டம் முத்துராஜவளை சரணாலயப் பகுதியில் கட்டிடம் கட்டுதல் உள்ளிட்ட சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஜனாதிபதி இந்த தடையினை விதித்துள்ளார்.

இந்த தடை விதிக்கப்பட்ட தகவலை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் 400 ஏக்கர் காணி கட்டிட நிர்மாணத்துக்காக வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்ததையடுத்து இன்று அதிகாலை அந்தப் பகுதிக்கு சென்ற ஜனாதிபதி கண்காணிப்பில் ஈடுபட்டதாக கூறபட்டுள்ளது.

இதனையடுத்து உடன் அமுலுக்கு வரும்வகையில் இந்த உத்தரவை செயற்படுத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு விடுத்திருப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வரலாற்றில் இடம்பிடித்து கொழும்பு மாநகர மேயரானார் ரோஸி

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஸி சேனாநாயக்க கொழும்பு மாநகர சபையின் முதன் பெண் மேயரான இன்று வியாழக்கிழமை பதவியேற்றுக்கொண்டார்.

இதன்படி கொழும்பு மாநகர சபையில் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக 340 உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்கள் அண்மையில் கட்சித் தலைவரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு முன்பாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி பாகிஸ்தானுக்கு விஜயம்

பாகிஸ்தானுக்கான 2 நாள் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர் விஜயத்தை ஆரம்பித்தார்.

இந்த விஜயத்தின் போது பாகிஸ்தானின் தேசிய தின வைபவத்திலும் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார்.

இதன் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஆகியோருடன் இருதரப்பு பேச்சவார்த்தை நடத்தவுள்ளார்.

அத்துடன் இஸ்லாமபாத்தில் மறுசீரமைக்கப்பட்டுள்ள இராஜதந்திரிகளின் தங்குமிட பௌத்த மத்திய நிலையத்தையும் ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.

நிர்வாகிக்கு எதிரான நான்காவது போராட்டம் – தொழிலாளர்கள் விசனம்

நுவரெலியா – தலவாக்கலையில் பெருந்தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக தோட்ட தொழிலாளர்கள் இன்று வியாழக்கிழமை எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தோட்ட நிர்வாகத்திற்குள் பாராபட்சம் காட்டப்படுவதாக் இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நுவரெலியா – தலவாக்கலை பெரிய மட்டுக்கலை பெருந்தோட்டத்தில் தோட்டத்தொழிலாளியொருவருக்கும், கள உத்தியோகத்தர் ஒருவருக்குமிடையில் கடந்த மாதம் 16ஆம் திகதி முரண்பாடு ஏற்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து , பிரச்சினை முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

எனினும், தற்போது தமது தோட்ட நிர்வாகம் கள உத்தியோகத்தருக்கு மாத்திரம் தொழில் வழங்கியுள்ளதாகவும், தோட்ட தொழிலாளிக்கு தொழிலில் ஈடுபட அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஏனைய தொழிலாளர்கள் தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர்.

இதேவேளை, தமது தோட்ட அதிகாரி பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் நான்காவது எதிர்ப்பு நடவடிக்கை இது எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 4 =

*