;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (24.03.2018)

0

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் அடுத்த வாரம்..!!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும்.என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வி.சனத் பூஜித்த தெரிவித்தார்.

இதேவேளை தம்ம பாடசாலை இறுதி பரீட்சை நாடளாவிய ரீதியல் நாளைய தினமும் நாளை மறுதினமும் இடம்பெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வி.சனத் பூஜித்த தெரிவித்தார். சுமார் ஒரு லட்சம் பரீட்சார்த்திகள் இந்தப் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

தம்ம பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் தவறாது இந்தப் பரீட்சைக்கு தோற்ற வேண்டும் என்று பரீட்சைகள் ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

பிரதமருக்கு இன்று 69 வயது..!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் 69 ஆவது பிறந்த தினம் இன்று (24) கொண்டாடப்படுகின்றது.

இவரது பிறந்த தினத்தை முன்னிட்டு நாடு முழுவதுமுள்ள விகாரைகளிலும் ஏனைய பிற சமயத்தளங்களிலும் சமய நிகழ்வுகள் பல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இன்றைய நாளில் ஏழைகளுக்கு உணவளிக்கும் நிகழ்வும், வசதியற்றவர்களுக்கு உணவுப் பொருட்கள், ஆடை மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் என்பன வழங்குதல் போன்ற பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பிரதமருக்கு ஆசீர்வாதம் வேண்டி முன்னெடுக்கப்படும் முக்கிய நிகழ்வு இன்று மாலை 5.00 மணிக்கு சேதவத்த புரான விகாரையில் இடம்பெறவுள்ளது.

புகையிலை வரியை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை..!!

நாட்டில் சிகரெட் பாவனை 100 கோடியினால் குறைந்துள்ளதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

புகையிலை வரியை அதிகரிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததுள்ளது. குளிர்பானங்களில் அடங்கியுள்ள ஒரு கிராம் சீனிக்கு 50 சதம் வரி அறவிடப்படுகிறது.

இதற்கு அமைய சந்தையில் சீனி கலவை அற்ற குளிர்பானங்கள் அறிமுகப்படுத்தப்படுதாகவும் அமைச்சர் பாராளுன்றத்தில் நேற்று இடம்பெறும் விவாதத்தில் கூறினார்.

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுகளை தடுக்க சுகாதார அமைச்சு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு கூட்டு எதிர்கட்சி ஒத்துழைப்பு வழங்கும் என்று விவாதத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் பந்துலன குணவர்த்தன தெரிவித்தார்.

அரசாங்கத்தின் வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று விவாதத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க வலியுறுத்தினார்

போதை மாத்­தி­ரை­களை விற்­பனை செய்த மருந்­தக உரி­மை­யாளர் கைது..!!

போதை மாத்­தி­ரை­களை மாண­வர்­க­ளுக்கு விற்­பனை செய்து வந்த மருந்­தக உரி­மை­யாளரொருவர் பண்­டா­ர­வளை பொலி­ஸா­ரால் நேற்று கைது செய்­யப்­பட்­டுள்­ள­துடன் மருந்­த­கத்­தி­லி­ருந்த பெருந்­தொ­கை­யான போதை தரும் மாத்­தி­ரை­க­ளையும் பொலிஸார் மீட்­டுள்­ளனர்.

பண்­டா­ர­வளை பொலி­ஸா­ருக்கு கிடைக்­கப்­பெற்ற தக­வ­லொன்­றி­னை­ய­டுத்தே, மேற்­படி மருந்­த­கத்தை சுற்­றி­வ­ளைத்து பெருந்­தொ­கை­யான போதை மாத்­தி­ரை­களை மீட்­ட­துடன் மருந்­தக உரி­மை­யா­ள­ரையும் பொலிஸார் கைது செய்­தனர்.

பாட­சா­லைக்கு செல்லும் உயர்­தர வகுப்பு மாண­வர்­களை மையப்­ப­டுத்­தியே நீண்­ட­கா­ல­மா­க­ இம் மாத்­தி­ரைகள் விற்­பனை செய்­யப்­பட்டு வந்­தமை ஆரம்பகட்ட விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரியவந்­துள்­ளது.

கைது செய்­யப்­பட்­டவர் விசா­ர­ணை­களின் பின்னர் பண் டாரவளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவா ரென்று பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 + 6 =

*