;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (24.03.2018)

0

ஐ.தே.கவுடன் பயணிப்பது கஷ்டம் : தகுந்த பதிலடி கொடுப்போம்..!!

“உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைமைகள் எங்களை நாடி வந்து தீவிரமாக பேசிக்கொண்டிருக்கின்றனர்” என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு நிகழ்ந்துள்ள நம்பிக்கை மோசடிகளை பார்க்கின்ற போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இனியும் இணைந்து பயணிப்பது மிகவும் கஷ்டமான விடயமாகியுள்ளதாகவும், முஸ்லிம் காங்கிரஸ் வெற்றியீட்டிய சபைகளில் எம்மை புறந்தள்ளி விட்டு மாற்று அணிகளுடன் ஐ.தே.க ஆட்சியமைத்தால் அரசியல் ரீதியாக தகுந்த பதிலடி கொடுப்போம் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு பகுதியில் விபத்து ஒருவர் படுகாயம்..!!

கச்சக் கொடித்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் ஒரே பாதையில் பயணித்துக் கொண்டிருந்த போது முன்னுக்கு பின்னால் மோதி விபத்துக்குள்ளாகியது.

விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் காயமடைந்தார் இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றது.

இது தொடர்பாக கிண்ணியா போக்குவரத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு இருந்தனர்

பெற்றோல் விலையை அதிகரிக்கவில்லை என்றகிறது பெற்றோலியக் கூட்டுத்தாபனம்..!!

பெற்றொல் விலை அதிகரிப்பது தொடர்பில் எதுவித தீர்மானமும் இதுவரை எடுக்கவில்லை என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கூறியுள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இந்த விடயத்தைக் கூறியுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன இலபத்தை மாத்திரம் நோக்கமாக கொண்டு தீர்மானம் எடுக்கும் நிறுவனமல்ல என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நேற்று (23) நள்ளரவு முதல் 92 ஒக்டெய்ன் பெற்றோல் ஒரு லீற்றர் 09 ரூபாவாலும் டீசல் ஒரு லீற்றர் 05 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 + 14 =

*