;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (24.03.2018)

0

சுமூகமான உள்ளூராட்சி நிர்வாகத்துக்கு அனைத்துக் கட்சிகளினதும் ஒத்துழைப்பு வேண்டும்..!!

வடமாகாணத்தில் சுமூகமான உள்ளூராட்சி நிர்வாகத்தை நடாத்த அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பும், ஆதரவும் வழங்க வேண்டுமென வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாளை மறுதினம் உள்ளூராட்சி சபை நிர்வாகம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், கைதடியில் அமைந்துள்ள பேரவைச் செயலகத்தில் இன்று (24) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உள்ளூராட்சி நிர்வாகத்தை உள்ளூர் விடயம் என்பதால் அதற்குள் மட்டுப்படுத்திக்கொண்டு, சேவைகளை வழங்கக் கூடிய வகையில் அனைத்து தரப்பினர்களும் செயற்படுவதே இன்றைய தேவையாக இருக்கின்றது.

வடமாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி நிர்வாகத்தை சுமூகமான நிலையில் கொண்டு நடத்துவதற்காக அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

புரிந்துணர்வுகள் இடம்பெற வேண்டும். ஏனைய மாகாணங்களை விட வட மாகாணத்தில் சிறந்த நிர்வாகமாக திகழ வேண்டும்.

அந்தந்த கட்சிகள் தமது தலைவர்களை தெரிவு செய்வதன் மூலமும், அவர்களுக்கு ஆதரவு அளிப்பதன் மூலமாகவும், சுமூகமான சூழுலை உருவாக்க வேண்டும். முரண்பட்டுக்கொண்டு உள்ளூராட்சி சபைகளை நிர்வகிக்க முடியாது.

தனிப்பெரும்பான்மை பெற்ற எந்தக் கட்சியாக இருந்தாலும், முழுமையான ஆதரவை ஏனையோருக்கு வழங்கியும், கலந்துபேசியும், சிக்கலில்லாத நிர்வாகத்தை வடமாகாணத்தில் ஏற்படுத்த வேண்டுமென்று அனைத்துக் கட்சிகளிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது..!!

மாளிகாவத்தை பிரதேசத்தில் ​ஒரு தொகை கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாளிகாவத்தை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

இதன்போது சந்தேகநபரிடம் இருந்து 01 கிலோவும் 506 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச்ச சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

மாளிகாவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பால்மா விலையும் உயர்வு???..!!

குழந்தைகள் பால்மா தவிர்த்து ஏனைய அனைத்து பால்மா கிலோ ஒன்றின் விலையை 80 ரூபாவினால் அதிகரிக்க வாழ்க்கைச் செலவுகள் தொடர்பான குழு அனுமதி வழங்கியள்ளது என நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் டீ. ஜீவானந்த தெரிவித்தார்.

உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரித்துச் செல்வதன் காரணமாக இலங்கையில் அதன் விலையை அதிகரிக்க வேண்டும் என பால்மாவை இறக்குமதி செய்து விநியோகிக்கும் நிறுவனங்கள் நுகர்வோர் அதிகார சபையிடம் வைத்த கோரிக்கையை வாழ்க்கைச் செலவுகள் தொடர்பான குழுவிடம் நுகர்வோர் அதிகார சபை முன்வைத்தது.

குறித் கோரிக்கையை ஆராய்ந்த வாழ்க்கைச் செலவுகள் தொடர்பான குழு குழந்தைகள் பால்மா தவிர்த்து ஏனைய அனைத்து பால்மாக்களின் கிலோ கிராம் ஒன்றின் விலையை 80 ரூபாவினால் அதிகரிக்க அனுமதி வழங்கி உள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் வாரங்களில் வெளியிட முடியும் என நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

இன்னும் சில தினங்களில் மாகந்துரே மதுஷ் இத்தாலியில் கைது!!!

பொலிஸாரால் வலை வீசி தேடப்பட்டு வரும் பாதாள உலக குழுத் தலைவர் மாகந்துரே மதுஷ் தற்போது இத்தாலியில் வசித்துவருவதாக பொலிஸ் அதிரடிப்படை தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த பாதாள உலகக் குழுத் தலைவர் துபாயில் தங்கியிருந்த நிலையில் கைதுசெய்வதற்கான முயற்சிகளை பொலிஸார் மேற்கொண்டிருந்தபோதும் துபாய் நாட்டு சட்ட திட்டங்கள் காரணமாக சந்தேக நபரை கைது செய்ய முடியாமற் போனது.

பொலிஸாரின் கெடு பிடிகள் காரணமாக துபாயிலிருந்து தற்போது இத்தாலிக்கு தப்பியோடியுள்ள மாகந்துரே மதுஷ் இத்தாலியில் இருந்து சுவிட்சர்லாந்திற்கு செல்ல முயற்சித்துவருவதாக பொலிஸ் அதிரடிப்படை தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் இத்தாலியில் மாகந்துரே மதுஷ் தங்கியிருக்கும் இடத்தையும் அடையாளம் கண்டுள்ள பொலிஸ் அதிரடிப்படை எதிர்வரும் சில தினங்களில் மதுஷை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

சமயங் மற்றும் கொஸ் மல்லீ என அழைக்கப்படும் இரண்டு பாதாள உலகத்தவர்களின் கொலைகளில் மாகந்துரே மதுஷ் தொடர்புபட்டுள்ளதோடு விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்ததாகவும், இலங்கையில் முக்கிய பிரமுகர் ஒருவரின் கொலைக்கு உதவிகளை வழங்கியுள்ளமையும் விசாரணைகளில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிரடிப்படை தகவல் வெளியிட்டுள்ளது.

விலை தொடர்பில் எதுவித தீர்மானமும் இதுவரை எடுக்கவில்லை என்கிறது பெற்றோலியக் கூட்டுத்தாபனம்..!!

பெற்றோல் விலை அதிகரிப்பது தொடர்பில் எதுவித தீர்மானமும் இதுவரை எடுக்கவில்லை என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன இலபத்தை மாத்திரம் நோக்கமாக கொண்டு தீர்மானம் எடுக்கும் நிறுவனமல்ல என்று அந்த அறிக்கையில்குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் நேற்று நள்ளரவு முதல் 92 ஒக்டெய்ன் பெற்றோல் ஒரு லீற்றர் 9 ரூபாவாலும், டீசல் ஒரு லீற்றர் 5 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − seven =

*