;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (25.03.2018)

0

புத்தாண்டை முன்னிட்டு மேலதிகமாக 2000 பஸ்கள் சேவையில்

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்குச் செல்லும் பொதுமக்களின் வசதி கருதி, இலங்கை போக்குவரத்துச் சபை மேலதிகமாக இரண்டாயிரம் பஸ்களை சேவையில் ஈடுபடுத்த உள்ளது.

இதற்கு தேவையான மேலதிக பஸ்கள், நுவரெலியா, கண்டி, பதுளை உள்ளிட்ட பிரதேச அலுவலகங்களில் இருந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாகாண சபைத் தேர்தல் இந்த முறையில் நடத்தப்பட வேண்டும்.!

மாகாணசபைகளுக்கான தேர்தல் விகிதாசார தேர்தல் முறையில் நடத்தப்பட வேண்டும் என குறிப்பிட்ட பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி, முடிவடைந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பணத்துக்காக கொள்கைகளை மாற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

தேர்தல் காலங்களில் இணைந்து செயற்பட்ட கட்சிகள் உள்ளூர் சபைகளை இணைந்து நிறுவுவதில் இணக்கத்தை காட்ட மறுத்துள்ளன.

முக்கியமாக கட்சிகள் பணத்துக்காக தனது கொள்கைகளை மாற்றக்கூடிய சூழ்நிலை எழுந்துள்ளது. மில்லியன் கணக்கான தொகை பணம் இதற்கென செலவிடப்படுவதாக தகவல்கள் கிடைக்கபெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அரசியலமைப்பு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வல்ல : பந்துல சூளுரை

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது இனத்தின் அபிலாசைகளை அறிந்து செயற்பட வேண்டும். பிரதமரின் நிர்வாகத்தின் கீழ் வடகிழக்கில் கடந்த மூன்று வருடகாலமாக நிலையான அபிவிருத்திகள் ஏதும் செயற்படுத்தப்படவில்லை என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பிணர் பந்துல குணவர்தன

நாட்டை பிரித்து இனங்களுக்கிடையில் மீண்டும் விரோதங்களை ஏற்படுத்தும் அரசியலமைப்பினை உருவாக்கும் விடயத்திற்கு மாத்திரம் தமிழ் தேசிய கூட்டமைப்பு முக்கியத்துவம் கொடுக்காமல் தமது இனமக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விடயத்தில் கவனம் செலுத்துவதே அம்மக்களுக்கான அரசியல் தீர்வாக காணப்படும் என தெரிவித்தார்.

ஸ்ரீவஜிராஸ்ரம விகாரையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அனாவசிய அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டாம்.!

நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களில் தமிழர் தரப்பின் ஒத்துழைப்பு பூரணமாக கிடைத்து வருகின்றமை அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

எனினும் தீர்வுகள் குறித்து இணைந்து பயணிக்கும் செயற்பாட்டில் அனாவசிய அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டாம் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. எஞ்சியுள்ள காலத்திலும் பொறுப்புக்களை நிறைவேற்றுவோம் எனவும் அரச தரப்பு கூறுகின்றது.

நல்லிணக்கத்தை நடைமுறைபடுத்தும் செயற்பாட்டில் அரசாங்கத்தின் மந்தகதி போக்கினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் கண்டித்துள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கத்தை கடுமையாக சாடி வருகினது. இந்நிலையில் அரசாங்கம் எவ்வாறான நகர்வுகளை கையாளவுள்ளது என வினவிய போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனைக் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × three =

*