;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (25.03.2018)

0

பொது விவாதத்துக்கு அழைக்கிறார் ரஞ்சன்

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிரணியின் எம்.பிக்களை, விவாதத்துக்கு அழைத்துள்ளார்.

தான், உயர்நீதிமன்ற நீதியரசர்களை அவமதித்ததாக, ஒன்றிணைந்த எதிரணியின் எம்.பிகளால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை, பொய்யென்று நிரூபிப்பதாகக் கூறியே, இந்தப் பொது விவாதத்துக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

பாதணிக்குள் நாணயத் தாள்கள் மீட்பு சந்தேகநபர் கைது!!

41 இலட்சம் இலங்கை ரூபா பெறுமதியான சவுதி ரியால் நாணயத்தாள்களை பாதணிகளில் மறைத்து வைத்திருந்த நபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.

நீர்கொழும்பு, குரண பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து 41 இலட்சம் ரூபா பெறுமதியான 500 மற்றும் 200 ரியால் நாணயத்தாள்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கட்டணம் கூடும்?

ஒன்றிணைந்த தேசிய ஆட்டோ சாரதிகள் சங்கம் மற்றும் தொழிற்றுறையாளர்கள் சங்கம் என்பன, தமது கட்டணங்களை அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளன.

எரிபொருள் விலைகளின் அதிகரிப்பால், பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் அதனால், ஆட்டோகளின் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாகவும், அந்தச் சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

‘பஸ் கட்டணம் உயராது’

ஐ.ஓ.சி (இந்தியன் ஒயில் கோபரேஷன்) நிறுவனம், பெற்றோல் மற்றும் டீசல் விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தாலும், பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாதென, இலங்கைத் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

மேலும், ஐ.ஓ.சி நிறுவனமானது, எரிபொருட்களின் விலைகளை 5 ரூபாயால் அதிகரிப்பதால், பஸ் சேவைக்கு எவ்வித தாக்கமும் ஏற்படாதெனவும், அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 4 =

*