;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (26.03.2018)

0

மாணிக்க கற்களுடன் சீன பிரஜை ஒருவர் கைது..!!

21 மில்லியன் பெறுமதியான மாணிக்க கற்களுடன் சீன பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சங்ஹாய் நகரில் இருந்து வந்த சீன பிரஜை ஒருவரே நேற்று இரவு இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் இருந்து 12 மாணிக்க கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க திணைக்களம் தெரிவிக்கின்றது.

ஆட்சியாளர்களே இன முரண்பாடுகளுக்கு பொறுப்பு! ஞானசாரர்..!!

நாட்டின் இந்துக்களும், பௌத்தர்களும் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ அடிப்படைவாதிகளிடம் சிக்கியுள்ளனர் என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மஹாசோன் பலகாய அமைப்பின் பிரதானி உள்ளிட்டவர்களை ஞானசார தேரர் மற்றும் சில பௌத்த பிக்குகள் நேரில் சென்று பார்வையிட்டிருந்தனர்.

இவ்வாறு சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது ஞானசார தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…நாட்டின் இந்துக்களும், பௌத்தர்களும் இஸ்லாமிய வஹாப் வாதத்திற்கும், கிறிஸ்தவ அடிப்படைவாதத்திற்கும் இலக்காகியுள்ளனர்.

நாட்டில் மிக மோசமான கலாச்சார ஆக்கிரமிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இதனால் இனங்களுக்கு இடையில் நம்பக்கையீனமும், பிரச்சினைகளும் எழுந்துள்ளன.

ஒருவருக்கு ஒருவர் முரண்பட்டுக் கொண்டு எதனையும் சாதிக்க முடியாது, சிங்கள, தமிழ், முஸ்லிம் பேதங்களை களைந்து இணைந்து செயற்பட வேண்டும். மஹாசோன் பலகாயவின் உறுப்பினர்களை கைது செய்வதனால் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது, 70 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்களே இன முரண்பாடுகளுக்கான பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தெல்தெனிய, திகன சம்பவங்களுக்கு நாட்டின் பிரதமர் நேரடியாகவே பொறுப்புச் சொல்ல வேண்டுமென ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்

இந்­த­வாரம் கூடு­கி­றது சு.க.வின் மத்­தி­ய­குழு..!!

பிர­த­ம­ருக்கு எதி­ராக கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை குறித்து ஆராய ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் மத்­திய குழுக் கூட்டம் இந்த வாரம் இடம்பெறும் எனவும் ஜனா­தி­ப­தி­யுடன் ஆழ­மாக கலந்­து­ரை­யாடி பிர­தமர் விவ­கா­ரத்தில் தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அமைச்சர் சந்­திம வீரக்­கொடி தெரி­வித்தார்.

Image result for கூட்டம்

பிரே­ர­ணையில் கைச்­சாத்­தி­டு­வது குறித்து தனித்து தீர்­மானம் எடுக்க முடி­யாது எனவும் அவர் குறிப்­பிட்டார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக கூட்டு எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை ஒன்றை கொண்­டு­வந்­துள்ள நிலையில் எதிர்­வரும் மாதம் 4 ஆம் திகதி குறித்த பிரே­ரணை வாக்­கெ­டுப்­பிற்கு விடப்­ப­ட­வுள்­ளது. இந்­நி­லையில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் நிலைப்­பாடு என்­ன­வென வின­விய போதே அமைச்சர் இதனைக் குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறி­ய­தா­னது,

பிர­த­ம­ருக்கு எதி­ராக தொடர்ச்­சி­யாக நெருக்­கடி நிலை­மைகள் ஏற்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. அதற்கு ஐக்­கிய தேசியக் கட்­சியே பிர­தான கார­ண­மாகும். அவர்­களின் கொள்­கைகள், செயற்­பா­டுகள் என்­ப­வற்றில் பாரிய நெருக்­கடி நிலை­மைகள் உள்­ளன. ஐக்­கிய தேசியக் கட்­சியின் சில உறுப்­பி­னர்­களே மீண்டும் தமது நிலைப்­பாட்­டினை மாற்­றி­ய­மைத்து பிர­த­ம­ருக்கு எதி­ராக செயற்­ப­ட­வுள்­ள­தா­கவும் ஊட­கங்­களில் அறிய முடி­கின்­றது. எனினும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யாக நாம் இன்­னமும் எந்­த­வித இறுதித் தீர்­ம­ன­தையும் எடுக்­க­வில்லை. தீர்­மா­னத்தை ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் மத்­திய குழுக் கூட்­டத்­தி­லேயே தீர்­மா­னிக்­கப்­படும். நேற்­றைய தினமே (நேற்று முன்­தினம்) ஜனா­தி­பதி பாகிஸ்­தா­னிய விஜ­யத்தை முடித்­துக்­கொண்டு இலங்­கைக்கு வந்­துள்ளார். எனவே அடுத்த கட்ட நட­வ­டிக்­கைகள் இந்த வாரத்தில் முன்­னெ­டுக்­கப்­படும்.

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் மத்­திய குழுக் கூட்டம் இந்த வார நடுப்­ப­கு­தியில் கூடும். ஜனா­தி­பதி தலை­மையில் கூடும் எமது கூட்­டத்தில் பிர­தா­ன­மாக பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை குறித்து ஆரா­யப்­படும். இதில் மத்­திய குழு­வாக என்ன தீர்­மானம் எடுக்­கப்­ப­டு­கின்­றதோ அத­னையே நாம் சக­லரும் முன்­னெ­டுப்போம். பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை ஆத­ரிப்­பதா இல்­லையா என்­பது குறித்து கட்­சிக்குள் இரண்டு கருத்­துக்கள் நில­வு­கின்­றது. எனவே இறுதி நிலைப்­பாடு குறித்து ஆழ­மாக ஆரா­ய­வேண்­டிய தேவையும் உள்­ளது.

இந்த விட­யத்தில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யாக அல்­லாது எவரும் தனிப்­பட்ட தீர்­மா­னங்­களை முன்­னெ­டுக்க முடி­யாது. எனினும் கூட்டு எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் கொண்­டு­வந்­துள்ள நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிலர் கைச்சாத்திட்டுள்ளனர். இது கட்சியில் ஒழுக்க கோவைக்கு முரணானது. எனவே இது குறித்தும் மத்திய குழுக் கூட்டத்தில் ஆராய வேண்டும். எவ்வாறு இருப்பினும் பிரதமரை ஆதரிப்பதா இல்லையா என இன்னும் இஸ்திரமான நிலைபாட்டினை நாம் எட்டவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × two =

*