;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (26.03.2018)

0

அதிகரிக்கிறது பால் மா விலை..!!

ஒரு கிலோ பால்மா பக்கெட்டின் விலை, ரூபா 80ஆல் அதிகரிக்கவுள்ளதாக நுகர்வோர் விவகாரங்கள் ஆணையம் (CAA) தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்தே, இவ் அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் 400 கிராம் பால் மா பக்கெட்டின் விலை ரூபா.35ஆல் அதிகரிக்கவுள்ளதோடு, புதிய விலைப் பட்டியல் இன்னும் வெளியாகாத நிலையில், விரைவில் அது பற்றி அறிவிக்கப்படுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெல்லவாய பகுதியில் பரவிய காட்டுத் தீ..!!

வெல்லவாய – சியம்பலாகுணய – வவுல்கலபத்தன பகுதியில் நேற்றிரவு (25) காட்டுத் தீ பரவியுள்ளது.

25 ஏக்கர் நிலப்பரப்பு காட்டுத் தீயினால் ​அழிவடைந்துள்ளது எனவும், ​​மேலும் ​அதிகமான காற்று காரணமாக காட்டுத் தீயினைக் கட்டுபாட்டிற்குள் கொண்டுவருவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொரட்டுவை மாநகர சபையின் புதிய மேயர் தெரிவு..!!

மொரட்டுவை மாநகர சபையின் புதிய மேயராக, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சமன்லால் பெர்ணான்டே வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த வாக்கெடுப்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சமன்லால் பெர்னான்டேவுக்கு ஆதரவாக 23 வாக்குகளும் ஐக்கிய தேசிய கட்சியின் பிலிப் டாவித் 21 வாக்குகளும் கிடைக்கப்பபெற்றுள்ளன.

அத்துடன் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சின் 4 உறுப்பினர்கள், மக்கள் விடுதலை முன்னணியின் 4 உறுப்பினர்கள் மற்றும் சுயேட்சை குழு உறுப்பினர் உள்ளிட்ட 9 பேர் வாக்குகளிப்பில் கலந்துகொள்ளவில்லை.

இலங்கையில் தினமும் இவ்வளவு பேர் சாவடைகின்றார்களா? அதிர்ச்சித் தகவல்..!!

இலங்கையில் நாளாந்தம் உயிரிழப்போர் தொகை தொடர்பாக அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. எட்டு முதல் பத்து பேர் வரை நாளாந்தம் உயிரிழப்பதாகவும், 50 பேர் வரை காயமடைவதாகவும் கூறப்பட்டுள்ளது.

விபத்துக்கள் மூலமாகவே இந்த மரணங்கள் பதிவாகியிருக்கின்றன என்றும் அதுமாத்திரமின்றி வாகன விபத்துக்களினால் காயமடைபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மாத்திரம் அரசாங்கத்திற்கு வருடாந்தம் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபா செலவாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகை, மொத்த தேசிய வருமானத்தில் 1.5 சதவீதமாகும் என்று பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. உந்துருளி மற்றும் முச்சக்கர வண்டிகளே கூடுதலாக விபத்திற்குள்ளாகின்றன.

கடந்த வருடம் ஜனவரி 1ம் திகதி முதல் டிசம்பர் 31ம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இரண்டாயிரத்து 910 விபத்துக்கள் இடம்பெற்றள்ளன. இந்தக் காலப்பகுதிக்குள் 3 ஆயிரத்து 78 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் தொள்ளாயிரத்து 35 பேர் பாதசாரிகளாவர். தொள்ளாயிரத்து 98 பேர் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களாவர். அலட்சியமாக வாகனம் ஓட்டுகின்றமையே இவ்வாறான விபத்துக்களுக்குப் பிரதான காரணம் என போக்குவரத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 3 =

*