;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (27.03.2018)

0

மன்னார் மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி..!!

மன்னார் – தோட்டவௌி, ஜோசப்வாஸ் நகர் மற்றும் கட்டுவான் பிரதேச மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு மன்னார் நீதவான் எம். எலெக்ஸ் ராஜாவினால் நீக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட உபகரணங்களை பயன்படுத்துவதாக குற்றம்சுமத்தப்பட்டு மன்னார் உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலக அதிகாரிகளால் மன்னார் நீதவான் நீதிமன்றுக்கு வழங்கப்பட்ட தகவல்களின் படி, அப்பிரதேச மீன்பிடி துறைமுகங்களில் இருந்து மீன்பிடி நடவடிக்கைக்கு செல்ல 23 மீனவர்களுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது.

சட்டரீதியான மீன்பிடி வலைகள் உள்ளிட்ட உபகரணங்களை கொள்வனவு செய்து சட்டத்தை மீறாமல் கடற்றொழிலில் ஈடுபடுவதாக குறித்த மீனவர்கள் நீதிமன்றத்தில் உறுதியளித்த பின்னர் அவர்களுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டுள்ளது.

அக்கரப்பத்தனை பிரதேச சபை இ.தொ.கா வசம்..!!

அக்கரபத்தனை பிரதேசபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவு மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எச்.எம்.யு.பி.ஹேரத் தலைமையில் இன்று (27) காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.

இதில் திறந்த முறையில் வாக்கெடுப்புக்களை நடத்த முடிவு செய்யப்பட்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக தலைவர் பதவிக்கு சுப்பிரமணியம் கதிர்ச்செல்வனும், ஐக்கிய தேசிய கட்சி சார்பாக வேலு சிவானந்தனும் போட்டியிட்டனர்.

இதில் எட்டு வாக்குகளை பெற்று சபையின் தலைவராக இலங்கை தொழிலாளர் காங்கிராஸ் சார்பாக போட்டியிட்ட சுப்பிரமணியம் கதிர்ச்செல்வன் தெரிவு செய்யப்பட்டார்.

எதிராக போட்டியிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் வேலு சிவானந்தன் 06 வாக்குகளே பெற்றுக்கொண்டார். இதில் கடிகாரம் சின்னத்தில் சுயட்சையாக போட்டியிட்டு போனஸ் ஆசனத்தில் தெரிவான ருவான் பத்திரன எவருக்கும் வாக்களிக்கவில்லை.

இந்த சபைக்கு உப தலைவர் தெரிவு செய்வதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் சுப்பிரமணியம் சுதாகரும் பொதுஜன பெரமுனவில் ஜயலத் விஜயதுங்கவும் போட்டியிட்டனர்.

இதில் பொதுஜன பெரமுனவில் போட்டியிட்ட ஜயலத் விஜயதுங்க 08 வாக்குகளை பெற்று உபதலைவராக தெரிவானர்.

இவருக்கு எதிராக போட்டியிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் சுப்பிரமணியம் சுதாகருக்கு 06 வாக்குகள் மாத்திரமே பெற முடிந்ததுடன் இதற்கும் சுயேட்சையில் போட்டியிட்டு தெரிவானவர் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உதயங்க வீரதுயங்க டுபாயில் கைது..!!

ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுயங்க டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டதாக அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நேற்று இந்தக் கைது சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

உதயங்க வீரதுயங்கவை சர்வதேச பொலிஸார் ஊடாக கைது செய்வதற்காக சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை கூறத்தக்கது.

மன்னார் மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி..!

மன்னார் – தோட்டவௌி, ஜோசப்வாஸ் நகர் மற்றும் கட்டுவான் பிரதேச மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு மன்னார் நீதவான் எம். எலெக்ஸ் ராஜாவினால் நீக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட உபகரணங்களை பயன்படுத்துவதாக குற்றம்சுமத்தப்பட்டு மன்னார் உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலக அதிகாரிகளால் மன்னார் நீதவான் நீதிமன்றுக்கு வழங்கப்பட்ட தகவல்களின் படி, அப்பிரதேச மீன்பிடி துறைமுகங்களில் இருந்து மீன்பிடி நடவடிக்கைக்கு செல்ல 23 மீனவர்களுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது.

சட்டரீதியான மீன்பிடி வலைகள் உள்ளிட்ட உபகரணங்களை கொள்வனவு செய்து சட்டத்தை மீறாமல் கடற்றொழிலில் ஈடுபடுவதாக குறித்த மீனவர்கள் நீதிமன்றத்தில் உறுதியளித்த பின்னர் அவர்களுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two − 1 =

*