;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (27.03.2018)

0

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாது..!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியால் ​எதிர்ப்பு தெரிவிக்க முடியாத நிலை காணப்படுவதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொருளாலர் எஸ்.பீ திசாநாயக்க கூறியுள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

கோட்டாவை கைது செய்வதற்கான தடை மேலும் நீடிப்பு..!!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை விலக்குவதா இல்லையா என்பது தொடர்பான உத்தரவை எதிர்வரும் 05ம் திகதி வழங்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அதன்படி கோட்டாபய ராஜபக்‌ஷவை எதிர்வரும் 06ம் திகதி வரை கைது செய்ய தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு இன்று (27) மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சுரசேன மற்றும் சிரான் குணரத்ன ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இலங்கையில் மே தினம் பிற்போடப்பட்டது; காரணம் இதுதான்..!!

சர்வதேச தொழிலாளர் தினமான மே மாதம் 01ம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள தொழிலாளர் தின நிகழ்வுகள் எதிர்வரும் மே மாதம் 07 ம் திகதிக்கு பிற்போட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பௌத்த மதத்தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இன்று அமைச்சரவை அனுமதியும் வழங்ககப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29 மற்றும் 30ம் திகதிகள் வெசாக் போயா தினமாக அமைந்துள்ளதால், தொடர்ந்து வரும் வாரம் வெசாக் வாரமாக இலங்கையில் அனுஷ்டிக்கப்படுவது வழமை.

அதன்படி பௌத்த மதத்தலைவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக மே மாதம் 01ம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள தொழிலாளர் தின நிகழ்வுகளை மே மாதம் 7 ம் திகதிக்கு பிற்போட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சிவனொளிபாதமலை பருவகாலம் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவு..!!

2017- 2018 ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை பருவகாலம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 திகதி நிறைவடைவதாக பூஜ்ய பெங்கமுவ தேரர் தெரிவித்தார்.

சிவனொளிபாதமலை பருவகாலம் நிறைவு தொடர்பில் விளக்கமளிக்கும் கூட்டம் நல்லத்தண்ணி கிராம சேவகர் காரியாலயத்தில் இன்றையதினம்(27.03.2018) இடம்பெற்ற போதே தேரர் இவ்வாறு தெரிவித்தார்.

சிவனொளிபாதமலை பருவகாலம் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவு!

தேரர் மேலும் தெரிவிக்கையில்……

சிவனொளிபாதமலை உச்சியில் வைக்கப்பட்டுள்ள சமன் தெய்வதிருவுருவம், பூஜை பொருட்கள், விசேட வழிபாடுகளின் பின்னர் நோர்வூட் பொகவந்தலா பலாங்கொட வழியாகவும் ஹற்றன் அவிசாவளை ரத்தினபுரி வழியாகவும், ரத்தினபுரி பலாபத்த வழியாகவும், வாகன பவனியில் கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் அம்பகமுவ பிரதேச செயலாளர் டி பி. சுமன சேகர, ஹற்றன் மாவட்ட பொலிஸ் அதிகாரி ரவீந்திர அம்பேபிட்டிய உட்பட அரச. அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five − four =

*