;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (28.03.2018)

0

01ம் திகதி முதல் மக்கள் மீது பல புதிய வரிச்சுமைகள்..!!

ஏப்ரல் மாதம் 01ம் திகதி முதல் இதுவரை காலமும் இல்லாத வகையில் பல்வேறு துறைகளுகளுக்கும் வரி அறிவடப்படும் புதிய ஆண்டு உதயமாகும் என்று கூட்டு எதிரக்கட்சி உறுப்பினர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,

ஏப்ரல் மாதம் 01ம் திகதியில் இருந்து காணி ஒன்றின் உரிமை மாற்றம் செய்யும் போது அல்லது மற்றொருவருக்கு விற்பனை செய்யும் போது 10 % வரி செலுத்த வேண்டும்.

அதேபோல் மாடி வீடுகளை கொள்வனவு செய்யும் போது நூற்றுக்கு 15% வெட் வரி செலுத்த வேண்டும். இதுபோன்ற பல வரிகளை ஏப்ரல் 01ம் திகதியிலிருந்து செலுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

அதேநேரம் சித்திரைப் புத்தாண்டு நிறைவடைந்த உடனேயே இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் பெற்றோல் விலையை அதிகரிக்கும் என்றும் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.

மஸ்கெலியா பிரதேச சபையில் பதற்ற நிலை..!!

மஸ்கெலியா பிரதேச சபைக்கான தலைவர் தெரிவு நடவடிக்கையின் போது அங்கு சற்று பதற்றமான நிலை தோன்றியுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

இதனையடுத்து அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மஸ்கெலியா பிரதேச சபைக்கான தலைவர் தெரிவுக்கான வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது.

இந்நிலையில் அந்த சபைக்கு தெரிவு செய்யப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பெண் உறுப்பினர் ஒருவர் சபைக்கு வருகை தராமையின் காரணத்தால் அங்கு பதற்ற நிலை தோன்றியதாக தெரிவிக்கப்படுகிறது.

இலத்திரனியல் வாக்குப்பதிவு முறை இல்லை..!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது இலத்திரனியல் வாக்கெடுப்பு முறை நடத்தாதிருக்க கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால இதனைக் கூறியுள்ளார்.

இன்று காலை கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டம் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் சபாநாயகர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

அதன்படி இதன்போது திறந்த அடிப்படையில் வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் செயற்கை மழை..!!!

நாட்டில் விரைவில் செயற்கை மழை பெய்யச் செய்யக்கூடிய சந்தர்ப்பம் உருவாக்கப்படும் என மின்வலு எரிசக்தி அமைச்சின் செயலாளர் சுரேன் படகொட தெரிவித்துள்ளார்.

செயற்கை மழை பெய்யச் செய்யும் முறைமைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில், நாட்டில் தெரிவு செய்யப்பட்ட சில பகுதிகளில் இவ்வாறு செயற்கை மழை பெய்யக்கூடிய ஒர் நடைமுறையை அமுல்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.

செயற்கை மழையை பெய்யச் செய்யக்கூடிய நிபுணர் குழுவொன்று கடந்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு நீர்த்தேக்க பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டிருந்ததோடு, இலங்கையிலிருந்தும் நிபுணர் குழுவொன்று தாய்லாந்த சென்று செயற்கை மழை தொடர்பில் பயிற்சி பெற்று வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × four =

*