;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (28.03.2018)

0

திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுப்பதற்கு நடவடிக்கை..!!

இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களிலும் 529 பேஸ்புக் கணக்குகளை முடக்குவதற்கு பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

​போலி கணக்குகளை ஆரம்பித்தல், பேஸ்புக் கணக்குகள் மூலம் நிதி மோசடியில் ஈடுபடுதல் உள்ளிட்ட குற்றச் செயல்களை அடிப்படையாகக் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கனிணி அவசர பிரிவின் பிரதான தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொசான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் பேஸ்புக் தொடர்பான முறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டு, 3600 பேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்டதாக, அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர்களுக்கு ஜனாதிபதி ஊடக விருது..!!

ஊடகவியலாளர்களுக்கான ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் வைபவம் ஒன்றை ஆண்டு தோறும் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஊடகவியலாளர்களின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற பணிகள் மற்றும் அவர்களின் பங்களிப்புகள் என்பவற்றை மதிப்பிடுவதற்காக ஊடகவியலாளர்களுக்கான ஜனாதிபதி ஊடக விருது வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்களுக்கான ஜனாதிபதி ஊடக விருது 2018ம் ஆண்டிலிருந்து வருடந்தோறும் நடாத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சீதுவ குற்றப்பிரிவு OIC விளக்கமறியலில்..!!

சீதுவ பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரியை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

அவரை எதிர்வரும் 04ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீவான் லால் ரணசிங்க உத்தரவிட்டதாக அத தெரண செய்தியாளர் கூறினார்.

அவரை பிணையில் விடுவக்க அவர் சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள் கோரியிருந்த போதிலும், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதன்படி அவருக்கான பிணை நிராகரிக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சீதுவ பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி, 25,000 ரூபா பணம் மற்றும் மதுபான போத்தல் ஒன்றையும் இலஞ்சமாக பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கடந்த 13ம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீதிபதி விலகியதால் மெண்டிஸ் நிறுவனத்தின் வழக்கு பிற்போடப்பட்டது..!!

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி சம்பவத்தில் தற்போது விளக்கமறியலில் இருக்கின்ற அர்ஜுன் எலோசியஸ் உரிமை வகிக்கும் எம். மெண்டிஸ் மதுபான நிறுவனத்தின் வங்கிக் கணக்கு மத்திய வங்கியால் தடை செய்யப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை பிற்போடப்பட்டுள்ளது.

அந்த மனுவை விசாரிக்கும் நீதிபதிகள் குழாமில் உள்ள ஒரு நீதிபதி விலகிக் கொண்டுள்ளதால் அந்த மனுவை அடுத்த மாதம் 03ம் திகதி வரை பிற்போடுவதற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது, நீதிபதி பிரசண்ண ஜயவர்தன வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி சம்பவத்தின் பின்னர் தமது வங்கிக் கணக்கு மத்திய வங்கியால் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் தமது நிறுவன ஊழியர்களுக்கான சம்பளத்தை கொடுப்பதற்கு கூட முடியாத நிலை தோன்றியுள்ளதாக மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் கூறினார்.

இதன் காரணமாக தமது நிறுவனத்தின் வங்கிக் கணக்கு மீது விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்ட நிலையில் மனு எதிர்வரும் 03ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − two =

*