;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (28.03.2018)

0

​போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கைது..!!

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜித்தை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

2012 ஆம் ஆண்டு வெலிகட சிறைச்சாலை கைதிகள் சிலரை கொலை செய்த குற்றதிற்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2020 ஆம் ஆண்டு ஜீ.எஸ்.பி வரி சலுகை நீடிப்பு

இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு ஜீ.எஸ்.பி வரி சலுகையை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் நீடிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப் அனுமதி வழங்கியுள்ளதாக அமெரிக்க தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.

இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் கீழ்

இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனமும் அதன் துணை நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் கீழ் வர்த்தமானி அறிக்கையில் உட்படுத்தப்பட்டுள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனம், அரசாங்க தொழில்முயற்சிகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சின் கீழ்

லிட்ரோ எரிவாயு நிறுவனம், அரசாங்க தொழில்முயற்சிகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சின் கீழ் வர்த்தமானி அறிக்கையில் உட்படுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − seven =

*