;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (29.03.2018)

0


ஐ.தே.கட்சியின் முக்கிய தீர்மானங்கள் இன்று!

நம்பிக்கையில்லா பிரேரணையை முறியடிப்பது தொடர்பான முக்கியமான தீர்மானங்கள் ஐக்கிய தேசிய கட்சியினால் இன்று (வியாழக்கிழமை) மேற்கொள்ளப்படவுள்ளது.

கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இன்று மத்திய செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதன்போதே முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று இடம்பெற்றது. இதன்போது நேற்முன்தினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தை குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, ”நம்பிக்கையில்லா பிரேரணையை முறியடிப்பது தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து அதன்போது விவாதிக்கப்பட்டது. அதன்படி முக்கிய தீர்மானங்கள் இன்று மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துவது தவறு

அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியிருப்பதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போது, ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன் அனுகூலங்கள் மக்களுக்கு கிடைக்கத் தொடங்கியுள்ளன. எனினும், இதுவரை பூர்த்தி செய்யப்படாத சில விடயங்களின் அடிப்படையில் சிலர் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துகிறார்கள். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவின் கீழ் இருந்த நிறுவனங்கள் நீக்கம் : ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை.!

இலங்கை மத்­திய வங்கி மீண்டும் நிதி அமைச்சின் கீழ் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. அத்துடன் பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவும் அவ்அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட் டுள்ளது. இலங்கை ஜன­நா­யக சோஷ­லிச குடி­ய­ரசின் அர­சியல் யாப்பின் 43(1) ஆம் அத்­தி­யா­யத்­துக்கு அமை­வாக ஜனா­தி­பதி நேற்று வெளி­யிட்ட 2064/26 எனும் அதி விஷேட வர்த்­த­மா­னியின் பிர­காரம் நேற்று முதல் உடன் அமு­லுக்கு வரும் வகையில் மத்­திய வங்கி இவ்­வாறு நிதி மற்றும் ஊடகத் துறை அமைச்சின் கீழ் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது.

காலா­கா­ல­மாக நிதி­ய­மைச்சின் கீழேயே மத்­திய வங்கி இருந்து வந்த நிலையில் கடந்த 2015 ஆட்சி மாற்­றத்தின் பின்னர் மத்­திய வங்­கி­யா­னது பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவின் கீழ் இருந்த தேசிய கொள்­கைகள் மற்றும் பொரு­ளா­தார அலு­வல்கள் அமைச்சின் கீழ் கொண்­டுவ­ரப்­பட்­டது.

அது முதல் அந்­நி­லைமை நீடித்த நிலையில், கடந்த 2015 செப்­டம்பர் 21 ஆம் திகதி ஜனா­தி­ப­தியால் வெளி­யி­டப்பட்ட 1933/13 ஆம் இலக்க அதி விஷேட வர்த்­த­மா­னியைத் திருத்­தியே நேற்று ஜனா­தி­பதி அதி விஷேட வர்த்­த­மா­னியை வெளி­யிட்டு மத்­திய வங்­கியை நிதி­ய­மைச்சின் கீழ் மீண்டும் கொண்­டு­வந்­துள்ளார்.

மத்­திய வங்­கி­யா­னது பிர­தமர் ரணிலின் கீழ் இருந்­ததால், மத்­திய வங்­கியில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் பிணை முறி மோச­டிகள் தொடர்பில் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழு முன்­னி­லை­யிலும் பிர­த­ம­ருக்கு சாட்­சி­ய­ம­ளிக்க வேண்டி ஏற்­பட்­டது.

அண்­மையில் அமைச்­ச­ரவை மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்ற நிலையில் நேற்று சில அமைச்­சுக்­களின் கீழ் வரும் நிறு­வ­னங்கள் மற்றும் பொறுப்­புக்கள் தொடர்பில் ஜனா­தி­பதி அதி விஷேட வர்த்­த­மா­னியை வெளி­யிட்டார். அதன் பிர­கா­ரமே மத்­திய வங்கி தற்­போது நிதி மற்றும் ஊடகத் துறை அமைச்சின் கீழ் கொன்டுவரப்பட்டுள்ளது. அதற்கு பொறுப்பாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர செயற்படுவார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + one =

*