;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4..!! (29.03.2018)

0

அர்ஜுன மஹேந்திரனை கைது செய்ய மீண்டும் பிடியாணை பிறப்பிப்பு..!!

முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவு கடந்த 15 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்டிருந்த போதும் இன்று (29) மீண்டும் பிடியாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊடகவியலாளர்களை கௌரவிக்க ஏற்பாடு

ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நோக்கில் ஊடக விருது வழங்கும் வைபவம் ஜனாதிபதியால் நடாத்தப்படவுள்ளது.

நல்லதொரு சமுதாயத்தை கட்டியெழுப்புவதில் முக்கிய பங்குவகிக்கும் ஊடகத்துறையினை மேலும் வலுப்படுத்தி, ஊடக கலாச்சாரத்தினை வளர்ப்பதற்கான ஊக்குவித்தலை வழங்குதலே இவ்வைபவம் முன்னெடுக்கப்படுவதற்கான முக்கிய நோக்கமாகும்.

ஊடகவியலாளர்களினது திறன்களையும் பங்களிப்புக்களையும் மதிப்பிட்டு தொழில் ரீதியாக ஊடகவியலாளர்களால் ஆற்றப்படும் சேவைகளுக்கு மதிப்பளித்து விருது வழங்கல் இடம்பெறவுள்ளது.

மேலும், இவ் விருது வழங்கல் இவ்வாண்டிலிருந்து தொடர்ச்சியாக வருடந்தோறும் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பொருட்களுடன் நால்வர் கைது

புதுவருட தினத்தை முன்னிட்டு, டுபாயிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட சிகரட்கள், மதுபானப் போத்தல்கள் மற்றும் அலைபேசிகள் ஆகியவற்றுடன், சந்தேகநபர்கள் 4 பேர் இன்று (29) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் குருநாகல் மற்றும் நிட்டம்புவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட குறித்த பொருட்களின் பெறுமதி 34 இலட்சம் ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க ஐ.தே.க தீர்மானம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘அரசாங்கத்தின் பெரும்பான்மை நீக்கப்பட வேண்டும்’

அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் காணப்படும் பெரும்பான்மையை ஒழிக்க வேண்டுமென, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இன்றைய தினம் (29) கடுவல நகரசபை நகராதிபதி தனது கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, இதனைத் தெரிவித்தார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + six =

*