;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-5..!! (29.03.2018)

0

‘மெரினி டி லிவேரா பழிவாங்கப்படுகின்றார்’

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் மெரினி டி லிவேரா தற்போதைய அரசாங்கத்தால் பழிவாங்கப்படுவதாக, தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய ஏற்பாட்டாளர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.

பிட்டகோட்டேயில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட சந்தேகநபர்கள்

வெலிகடை சிறைச்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்ட எமில் ரஞ்சன் லமாஹேவா மற்றும் நியோமால் ரங்கஜீவ ஆகியோர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக, சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துசார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

2012ஆம் ஆண்டு வெலிகடை சிறைச்சாலைக்குள் 27 கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டமைத் தொடர்பில், விசாரணைகளை முன்னெத்து வரும் குற்ற விசாரணைப் பிரிவு நேற்று இரவு போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின்பொலிஸ் பரிசோதகரான ரங்கஜீவவையும், இன்று சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவையும் கைது செய்தது.

கைதுசெய்யப்பட்ட பின்னர் குறித்த இருவரும், திடீர் சுகயீனமுற்றதால், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

சந்தேகநபர்கள் இருவரையும் கொழும்பு மேலதிக நீதவான் ரங்க திசாநாயக்க வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிட்டு குறித்த இருவரையும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதனையடுத்து, சந்தேகநபர்கள் இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

’பிளேட்’’ வெட்டுக்குள்ளானவர் வைத்தியசாலையில் அனுமதி

பதுளை, ஹாலிஎல பிரதேசத்தில், பிளேட் வெட்டுத் தாக்குதலுக்கு உள்ளான ஒருவர், பதுளை வைத்தியசாலையில், நேற்று (28) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளாரென, ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.

மொஹொமட் கரீம் ஹசின் என்பவரே, இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரை இனந்தெரியாத நபர்கள் இருவரே, பிளேடால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளனரென முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி நபரின் வயிறு மற்றும் கால்களில் பிளேடால் வெட்டப்பட்டக் காயங்கள் காணப்படுகின்றனவென, வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில், பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசாங்கம் கடந்த கால தவறுகளை உன்னிப்பாக அவதானித்து வருகிறது

அரசாங்கம் கடந்த கால தவறுகளை உன்னிப்பாக அவதானித்து வருகிறது. அதனடிப்படையில் அரசியல் பேதமின்றி இளைஞர் சமூகத்திற்கு நன்மைகளைப் புரியுமென அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.

நிக்கவரட்டியவில் நேற்று இடம்பெற்ற யொவுன்புர இளைஞர் முகாமின் ஆரம்ப நிகழ்ச்சியில் அமைச்சர் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் எதுவித பேதமும் இன்றி ஒட்டுமொத்த இளைஞர் சமுதாயத்தின் அபிவிருத்திக்காக பாடுபடுகிறது. நாட்டின் எந்தவொரு அரசியல் நிலைமாற்றத்திலும் இளைஞர் சமுதாயத்தின் தாக்கம் வலுவானது என அமைச்சர் சாகல ரத்னாயக்க மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 + 6 =

*