;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (30.03.2018)

0

”அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்”

முஸ்லிம் இனத்திற்கு எதிராக தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் இன வன்முறைகள் எதிர்காலத்தில் வட கிழக்கு தமிழ் மக்கள் மீதும் மேற்கொள்ளப்படலாம். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தமிழ் மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும்.

தேர்தல்கள் இடம்பெறும்போது யார் வேண்டுமானாலும் எந்தக் கட்சியிலும் போட்டியிடலாம். எந்த கட்சிக்கும் ஆதரவளிக்கலாம். ஆனால் எமது இனத்திற்கொரு பிரச்சினை எனும் போது அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அந்த வகையில் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என பாரதி ஜெயராஜ் கூறிய கருத்து வரவேற்கத்தக்கதாகும் என வட மாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

அகில இலங்கை கம்பன் கலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கம்பன் விழா 2018 இன்று கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் இடம்பெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த பிரதேச சபையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வசம்

வெலிமடை பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உபதலைவர் தெரிவு நேற்று நண்பகல் 12 மணியளவில் வெலிமடை பிரதேச சபையின் புதிய கட்டிடத்தில் நடைபெற்றது.

வெலிமடை பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் ஆகிய தெரிவுகள் ஊவா மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் மங்கள விஜயநாயக தலைமையில் இடம்பெற்றது.

பிரதேச சபையின் தலைவராக, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்டு தெரிவான எஸ்.ஏ.ஆர்.பந்துசேனவும், உப தலைவராக ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்டு தெரிவான சீத்தா சமரவீரவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தலைவர் தெரிவுக்கான வாக்களிப்பு திறந்த முறை வாக்கெடுப்பாகவே நடைபெற்றது.

இச்சபைக்கு தலைவரை தெரிவுசெய்வதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு தெரிவான இந்திக சம்பத் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எஸ்.ஏ.ஆர்.பந்துசேன அவர்களும் போட்டியிட்டனர்.

இதில் 20 வாக்குகளைப் பெற்று எஸ்.ஏ.ஆர்.பந்துசேன தலைவர் பதவிக்கு தெரிவானார். இதற்கு எதிராக போட்டியிட்ட இந்திக சம்பத் 18 வாக்குகள் பெற்றுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற சீத்தா சமரவீர உப தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

உப தலைவர் தெரிவுக்காக எதிர்கட்சி உறுப்பினர்களிடம் வினவியபோது, வேறு ஒருவரை தெரிவு செய்ய முன்வராததனால் இவர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

41 உறுப்பினர்களைக் கொண்ட வெலிமடை பிரதேச சபை தலைவர் தெரிவு போட்டியின்போது, மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் மூவர் வாக்களிக்கவில்லை என்பததோடு, இந்த தலைவர் தெரிவின்போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு, ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் 15 பேர் வாக்களித்து ஆதரவு தெரிவித்தமை குறிப்பித்தக்கது.

வெலிமடை பிரதேச சபைக்கு தேர்தலின்போது ஐக்கிய தேசிய கட்சிக்கு 15 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு 5 ஆசனங்களும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 18 ஆசனங்களும், மக்கள் விடுதலை முன்னணி கட்சிக்கு 03 ஆசனமும் கிடைக்கப்பெற்றன.

நாடாளுமன்றில் 12 மணிநேர விவாதம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்வுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்துக்கு, 12 மணித்தியாலங்களை ஒதுக்க நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

இவ்வாறு நீண்ட நேரம் விவாதம் இடம்பெறுவது இதுவே முதல் தடவை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பி​ரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை, எதிர்வரும் 4 ஆம் திகதி காலை 9.30 மணிமுதல் இரவு 9.30 மணிவரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வீட்டுப் பணியாளர்களுக்கு ஊழியர் சேமலாப நிதி

வீட்டுப் பணியாளர்களாக தொழில்புரிவோரின் நலன் கருதி அவர்களுக்கு ஊழியர் சேமலாப நிதியை அறிமுகம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் சட்டம் ஒன்றை கொண்டுவர எதிர்பார்த்துள்ளதாக, தொழில் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (30) பொலன்னறுவை மாவட்டத்தில் தொழிலாளர் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே, அமைச்சர் இதனை தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven − eleven =

*