;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (30.03.2018)

0

பிரேரணை தோல்வியடைந்தால் தொடர்ந்து பயணிக்க முடியாது

ஒன்றிணைந்த எதிரணியினர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டால் தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாதென, அமைச்சர் லக்ஷமன் யாப்பா தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இன்று (30) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக வாக்களிக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு முடியாதெனவும், நம்பிக்கையில்லாப் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுளு்ள விடயங்களை முன்வைக்க முடியாதெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நோர்வூட் மோதல் இருவர் விளக்கமறியலில்

நோர்வூட் பகுதியில், அரசியல் கட்சி ஆதரவாளர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும், எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஹட்டன் மாவட்ட நீதவான் டீ.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 28 ஆம் திகதி, மஸ்கெலிய பிரதேச சபைக்கான புதிய தலைவர் தெரிவின் போது அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் கட்சி ஆதரவாளர்களுக்கிடையில் மோதல் நிலை ஏற்பட்டது.

​மோதலில் ஐவர் ​காயமடைந்த நிலையில் டிக்கோயா மற்றும் நாவலப்பிட்டி ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“பைத்தியம் பிடித்தால் கூட பிரதமரை பதவி நீக்க முடியாது?!!!!”

பாராளுமன்றில் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை ஐ.தே.க தோற்கடித்தால் தற்போதைய நிலைமையை விட மோசமான வகையில் அதிகாரங்களை தக்க வைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படும்” என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் இராஜங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கட்சித் தலைமையகத்தில் இடம் பெற்ற போதே டிலான் மேற் கண்டவாறு தெரிவித்தார்.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த டிலான்

சர்வாதிகார ஜனாதிபதியை நீக்குவதாக வாக்குறுதி வழங்கி ஆட்சியமைத்த நல்லாட்சி அரசாங்கத்தில் அதியுச்ச சர்வாதிகார போக்கினை கொண்ட பிரதமரை உருவாக்கியுள்ளனர்.

நல்லாட்சியில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களில் ஜனாதிபதிக்கு எதிராக சில ஏற்பாடுகளை செய்வதன் மூலம் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்து ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்ய முடிந்தாலும் கூட பிரதமருக்கு பைத்தியம் பிடித்தால் கூட அவரை பதவியிலிருந்து நீக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என்று கேலியாக பதிலளித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 3 =

*