;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4..!! (30.03.2018)

0

அதிகரிக்கும் முக­நூல் முறைப்­பா­டு­கள்!!

இலங்­கை­யில் ஒவ்­வொரு ஆண்­டும் முகப்­புத்­தக பாவ­னை­யால் ஏற்­ப­டும் பிரச்­சி­னை­கள் தொடர்­பான முறைப்­பா­டு­ கள் அதி­க­ரித்த வண்­ணமே உள்­ளது. இந்த ஆண்­டின் ஆரம்ப மூன்று மாதங்­க­ளில் இலங்­கை­யில் முகப்­புத் தக பாவ­னை­யா­ளர்­க­ளின் கணக்­கு­கள் தொடர்­பாக மட்­டும் 70 சத­வீ­த­மான முறைப்­பா­டு­கள் கிடைக்­பெற்­றுள்­ள­தாக தக­வல் பாது­காப்பு ஆய்­வா­ளர் தீன தயா­ளன் தெரி­வித்­தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,
இலங்­கை­யில் ஒவ்­வொரு ஆண்­டும் முகப்­புத்­தக பாவனை தொடர்­பான முறைப்­பா­டு­கள் அதி­க­ரித்த வண்­ணமே உள்­ளன. முகப்­புத்­த­கம் தக­வல் பரி­மாற்ற ஊட­க­மாக காணப்­பட்­டா­லும் சமூ­கத்­தில் பிரச்­சி­னைக் கு­ரிய ஒரு தக­வல் பாரி­மாற்ற மூல­மாக பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது.

2018ஆம் ஆண்­டின் ஆரம்ப மூன்று மாதங்­க­ளில் தக­வல் பரி­மாற்­றங்­கள் தொடர்­பாக கிடைக்­க­பெற்ற முறைப்­பா­டு­க­ளின் படி இது வரை­யில் 720 முறைப்­பா­டு­கள் பதி­வா­கி­யுள்­ளன. இவற்­றுள் 70 சத­வீ­த­மான முறைப்­பா­டு­ கள் முகப்­புத்­த­கத்­து­டன் தொடர்­பு­பட்­ட­தா­கும் -– என்­றார்.

ரணி­லுக்கு முஸ்­லிம் காங்­கி­ரஸ் கைகொ­டுக்­குமா?

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­ சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தை ஆத­ரிப்­பதா அல்­லது எதிர்ப்­பதா என்­பது தொடர்­பில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யின் பங்­கா­ளிக் கட்­சி­யான சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸ் எதிர்­வ­ரும் 2ஆம் திக­தியே இறுதி முடிவை எடுக்­க­வுள்­ளது.

அந்­தக் கட்­சி­யின் மையச் செயற்­கு­ழுக் கூட்­டம் 2ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது.தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­ சிங்­க­வுக்கு எதி­ராக பொது எதி­ர­ணி­யால் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் மீது எதிர்­வ­ரும் 4ஆம் திகதி நாடா­ளு­மன்­றில் விவா­தம் நடை­பெ­ற­வுள்­ளது.

நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தைக் கொண்­டு­வந்­துள்ள பொது எதி­ர­ணி­யும் மற்­றும் மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­ யும் தீர்­மா­னத்­துக்கு ஆத­ர­வாக வாக்­க­ளிக்­க­வுள்ள நிலை­யில், ஏனைய கட்­சி­கள் தமது இறுதி நிலைப்­பாட்டை இது­வரை அறி­விக்­க­வில்லை.

நேற்­றைய தினம் கூடிய ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் மையச் செயற்­கு­ழுக் கூட்­டத்­தில் அந்­தக் கட்­சி­யின் அனைத்து நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் தீர்­மா­னத்­துக்கு எதி­ராக வாக்­க­ளிக்­க­வேண்­டு­மென தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டி­ ருந்­தது.

இதே­வேளை, சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் மையச் செயற்­கு­ழுக் கூட்­டம் எதிர்­வ­ரும் 3ஆம் திகதி கூட­வுள்­ளது. தலைமை அமைச்­ச­ருக்கு எதி­ரான பிரே­ரணை விவா­தத்­துக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்ள தினத்­துக்கு முதல்­நாள் தான் எந்­தெந்­தக் கட்­சி­கள் ஆத­ர­வா­க­வும் எதி­ரா­க­வும் வாக்­க­ளிக்­கப் போகின்­றன என்­பது தொடர்­பில் இறுதி முடி­வு­கள் வெளி­யா­கும்.

யாழ். மாநகர முதல்வருக்கு தமிழர் பேரவை பாராட்டு!!

யாழ்ப்­பாண மாந­கர முதல்­வ­ரா­கத் தெரிவு செய்­யப்­பட்­ட­ இ­மா­னு­வேல் ஆர்­னோ­ல்ட்­டுக்குக் கன­டி­யத் தமி­ழர் பேரவை பாராட்­டுத் தெரி­வித்­துள்­ளது.

கடந்த ஆண்டு இ.ஆர்­னோல்ட், போரி­னால் பாதிக்­கப்­பட்ட இலங்­கை­யின் வடக்கு – கிழக்கு பகு­தி­க­ளில் உள்­ள­ தே­வை­க­ளைப் பற்­றிய விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தும் நோக்­கோடு இரு தட­வை­கள் கன­டா­வுக்கு வருகை தந்­தி­ருந்­தார்.

‘‘ஆர்­னோல்ட்­டு­டன் நெருங்­கிப் பழ­கி­ய­தால், அவ­ரது பல திற­மை­களை யாழ்.மாந­க­ரத் தலை­வர் பத­விக்கு எடுத்­துச் செல்­வார் என்­ப­தை­யிட்டு மகிழ்ச்­சி­ய­டை­கின்­றோம். இதன்­மூ­லம், யாழ்ப்­பாண மாந­கரை மேம்­ப­டுத்­து­வ­தி­லும், மக்­க­ளின் குறை­க­ளைக் களை­வ­தி­லும் பெரும்­பங்­காற்­று­வார் என்ற நம்­பிக்­கை­யுள்­ளது’’ என்று கன­டி­யத் தமி­ழர் பேர­வை­யின் நிறை­வேற்று இயக்­கு­நர் டன்­ரன் துரை­ராஜா தெரி­வித்­துள்­ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × five =

*