;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (31.03.2018)

0

யாழ்ப்­பா­ணம் வரு­கி­றார் சந்­தி­ரிகா!!

யாழ்ப்­பா­ணத்­தில் அமைக்­கப்­பட்ட அம்­மாச்சி உண­வ­கக் கிளை­யைத் திறப்­ப­தற்கு நல்­லி­ணக்க செய­ல­ணி­யின் தலை­வி­யும் முன்­னாள் அரச தலை­வ­ரு­மான சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க இன்று யாழ்ப்­பாண வரு­கி­றார் என்று தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன.

வட­மா­கா­ண­ச­பை­யின் விவ­சாய அமைச்­சி­னால் காங்­கே­சன்­து­றை­யில் கட்­டி­மு­டிக்­கப்­பட்­டுள்ள அம்­மாச்சி உண­வக் கிளை­யைத் திறப்­ப­தற்கே சந்­தி­ரிகா இன்று வரு­கி­றார். மூன்று நாள்­கள் பய­ண­மாக வரும் அவர் யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­தில் நடை­பெ­றும் நிகழ்வு ஒன்­றி­லும் கலந்து கொள்­ள­வுள்­ளார்.

இந்த நிகழ்­வில் அமைச்­சர் மங்­கள சம­ர­வீர மற்­றும் மத்­திய வங்கி ஆளு­நர் உட்­பட்­டோ­ரும் கலந்­து­கொள்­ள­வுள்­ள­னர். தொடர்ந்து நாளை ஞாயிற்­றுக் கிழமை அரி­யாலை மரு­தங்­கேணி, காரை­ந­கர் உள்­ளிட்ட பல இடங்­க­ளுக்­கும் சென்று பல்­வேறு நிகழ்­வு­க­ளி­லும் கொள்­ள­வுள்­ளார்.

அதே போன்று மறு நாள் திங்­கட்­கி­ழமை கிளி­நொச்சி மாவட்­டத்­துக்­குச் சென்று அங்­கும் பல்­வெறு இடங்­க­ளில் பல நிகழ்­வு­க­ளில் கலந்து கொள்­ள­வுள்­ளார் என்று தக­வ­ல­றிந்த வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

ஐ.தே.கவுக்கும் மக்கள் முன்னணி ஆதரவு !!

ஈ.பி.டி.பியு­டன் இணைந்து சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­ வேட்­பா­ளரைத் திருக்­கோ­வில் பிர­தேச சபை­யில் ஆத­ரித்த தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி, பொத்­து­வில் பிர­தேச சபை­யில் ஐக்­கிய தேசி­யக் கட்சி வேட்­பா­ளரை ஆத­ரித்து அவ­ரைத் தவி­சா­ள­ராக்­கி­யது.

அம்­பாறை மாவட்­டத்­தின் பொத்­து­வில் பிர­தேச சபை­யின் தவி­சா­ளர் மற்­றும் பிர­தித் தவி­சா­ளர்­களை தெரிவு செய்­யும் முத­லா­வது அமர்வு நேற்­று­முன்­தி­னம் வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்­றது.

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் 6 உறுப்­பி­னர்­க­ளும், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் 5 உறுப்­பி­னர்­க­ளும், அகில இலங்கை மக்­கள் காங்­கி­ரஸ் கட்­சி­யின் 4 உறுப்­பி­னர்­க­ளும், தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் 3 உறுப்­பி­னர்­க­ளும், தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி, சுயேச்­சைக் குழு, மக்­கள் விடு­தலை முன்­னணி சார்­பில் தலா ஒரு­வ­ரு­மாக மொத்­த­மாக பொத்­து­வில் பிர­தேச சபைக்கு புதி­தாக தெரிவு செய்­யப்­பட்ட 21 உறுப்­பி­னர்­க­ளில் 20 உறுப்­பி­னர்­கள் தவி­சா­ளர் தெரி­வில் கலந்து கொண்­ட­னர்.

ஐக்­கிய தேசிய கட்­சி­யின் உறுப்­பி­னர் எம்.எஸ்.அப்­துல் வாஸித் மற்­றும் அகில இலங்கை மக்­கள் காங்­கி­ரஸ் கட்சி உறுப்­பி­னர் ஏ.சதக்­கத்­துல்­லாஹ் ஆகி­யோ­ரின் பெயர்­கள் தவி­சா­ளர் பத­விக்கு பிரே­ரிக்­கப்­பட்­டன.
பகி­ரங்க வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டது. ஐக்­கிய தேசி­யக் கட்சி முன்­மொ­ழிந்த வாஸித்­துக்கு 10 வாக்­கு­க­ளும், மக்­கள் காங்­கி­ரஸ் முன்­மொ­ழிந்த சதக்­கத்­துல்­லா­விற்கு 8 வாக்­கு­க­ளும் கிடைத்­தன.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி, சுயேச்­சைக் குழு என்­பன ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்கு ஆத­ரவு வழங்­கின. மக்­கள் விடு­தலை முன்­னணி உறுப்­பி­னர் ஒரு­வ­ரும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யில் அங்­கம் பெறும் தேசிய காங்­கி­ரஸ் உறுப்­பி­னர் ஒரு­வ­ரும் நடு­நிலை வகிப்­ப­தாக அறி­வித்­த­னர். எம்.எஸ்.அப்­துல் வாஸித் தவி­சா­ள­ராக தெரி­வா­னார்.

அத­னைத் தொடர்ந்து புதிய தவி­சா­ள­ரின் தலை­மை­யில் பிர­தித் தவி­சா­ளர் தெரிவு இடம்­பெற்­றது. பிர­தித் தவி­சா­ளர் பத­விக்கு சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி சார்­பாக ஏ.எம்.அப்­துல் மஜீத் மற்­றும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு சார்­பாக பெரு­மாள் பார்த்­தி­பன் ஆகி­யோ­ரது பெயர்­கள் முன்­மொ­ழி­யப்­பட்­டன. பார்த்­தி­பன் 10 வாக்­கு­க­ளை­யும், அப்­துல் மஜீத் 9 வாக்­கு­க­ளை­யும் பெற்­ற­னர். இதன் கார­ண­மாக அதிக வாக்­கு­களை பெற்ற பார்த்­தி­பன் பிர­தித் தவி­சா­ள­ராக தெரிவு செய்­யப்­பட்­டார்.

ரணி­லுக்கு எதி­ரான தீர்­மா­னம் வெற்­றி­ய­ளிக்க வாய்ப்­புள்­ளது!!

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­ சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் வெற்­றி­ய­ளிப்­ப­தற்­கான வாய்ப்­புக்­கள் அதி­கம் உள்­ளன. இவ்­வாறு ஜன­நா­யக இட­து­சாரி முன்­ன­ணி­யின் தலை­வ­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்­தார்.

வாசு­தேவ நாண­யக்­கார யாழ்ப்­பா­ணத்­துக்கு நேற்று வந்­தி­ருந்­தார். நல்­லூர் முரு­கன் ஆல­யம் சென்று வழி­பா­டு­க­ளில் ஈடு­பட்­டார். அங்கு ஊட­கங்­க­ளுக்­குக் கருத்துத் தெரி­வித்­த­போதே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­தா­வது,
சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யும், பொது­மக்­கள் முன்­ன­ணி­யும் இணைந்து தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மீதான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தை வெற்­றி­பெ­றச் செய்­யும் முயற்­சி­களை மேற்­கொள்­கின்­றன.

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யி­ன­ரும் இத­னைத் தோற்­க­டிக்­கும் முயற்­சி­க­ளில் ஈடு­பட்­டுள்­ள­னர். நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் வெற்­றி­ய­ளிப்­ப­தற்­கான வாய்ப்­புக்­களே அதி­கம் உள்­ளன. அது தொடர்­பில் தற்­போது எது­வும் உறு­தி­யா­கத் தெரி­விக்க முடி­யாது – என்­றார்.

4 ஆம் திகதி இரவு 9 மணி­யு­டன் கூட்­ட­ர­சின் ஆயுள் முடி­வுக்கு வரும்!!

கூட்டு அர­சைப் பாது­காக்க வேண்­டு­மா­யின் நாட்­டுக்­காக தலைமை அமைச்­சர் ரணில் பதவி விலக வேண்­டும். அவ்­வா­றில்­லா­விட்­டால் ஏப்­ரல் மாதம் 4ம் திகதி இரவு 9 மணி­யா­கும் போது கூட்டு அரசு முடி­வுக்கு வரும். இவ்­வாறு சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் இரா­ஜாங்க அமைச்­சர் லக்ஸ்­மன் யாப்­பா­அ­பே­வர்­தன தெரி­வித்­தார்.

கொழும்­பில் நேற்று நடத்­திய ஊட­க­வி­ய­லா­ளர் சந்­திப்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

‘தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரா­கக் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தை எதிர்த்து வாக்­க­ளிக்­கும் வகை­யி­லான கார­ணி­கள் எது­வும் இல்லை. கூட்டு அரசு தொட­ர­வேண்­டு­மாக இருந்­தால் தலைமை அமைச்­சர் பத­வி­யி­லி­ருந்து ரணில் விக்­கி­ர­ம­சிங்க வில­க­வேண்­டும்’ என்­றும் அவர் தனது கருத்­தில் குறிப்­பிட்­டுள்­ளார்.

துப்பாக்கியுடன் இருவர் கைது!!

களுத்துறை மாவட்ட குற்றவியல் பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ரி–56 ரக துப்பாக்கி, அதற்கு பயன்படுத்தப்படும் 28 தோட்டாக்களுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களில் ஒருவர் இராணுவத்தில் பணிபுரிந்தவர் என்று பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் இருவரும் மத்துகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 − three =

*