;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (31.03.2018)

0

குளங்களை புனரமைப்பு செய்யும் பணணிகள் ஆரம்பம்

உலர் வலய பிரதேசத்தில் உள்ள 2400 குளங்களை புனரமைப்பு செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் பொலன்னறுவை மாவட்டத்தில் 123 குளங்களை புனரமைப்பு செய்யும் பணிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

ஹிங்குராங்கொட, சந்தனபொகுன குளத்தின் புனரமைப்பு பணிகள் இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு கூறியுள்ளது.

நீண்ட காலமாக புனரமைக்கப்படாத பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள பழைய குளங்கள் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் புனரமைப்பு செய்யப்படவுள்ளன.

குளங்களை புனரமைப்பு செய்வதன் ஊடாக பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் எதிர்காலத்தில் தடையின்றி தங்கள் விவசாயத் தேவைகளுக்கான தண்ணீரை பெற முடியும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

அதேவேளை முறையான திட்டமிடல் படி இந்த அபிவிருத்தி திட்டங்களை அமுல்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விளக்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு கூறியுள்ளது.

திருத்தம் செய்யப்பட்ட புகையிரத பெட்டிகள் மீண்டும் சேவையில்

புகையிரத திணைக்களம் தனியார் துறையுடன் இணைந்து போக்குவரத்து தகுதியற்ற நிலையில் இருந்து புகையிரத பெட்டிகளை திருத்தியமைத்து மீண்டும் போக்குவரத்துக்கா இணைத்துக் கொண்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக 09 பெட்டிகளை புகையிரத போக்குவரத்தில் இணைத்துக் கொள்ள உள்ளதாக அந்த திணைக்களத்தின் பொது முகாமையாளர் எஸ். அபேவிக்ரம கூறினார்.

திருத்தம் செய்யப்பட்ட புகையிரத பெட்டிகளுடன் அடங்கிய புகையிரதம் இன்று காலை போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் கொழும்பு கோட்டையில் இருந்து றாகம வரையில் சேவையில் ஈடுபட்டது.

இது தவிர கொழும்பு – கண்டி மற்றும் கண்டி – மாத்தறை ஆகிய புகையிரத சேவைகளின் போதும் இந்த பெட்டிகள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக எஸ். அபேவிக்ரம கூறினார்.

நடக்கப் போவது இதுதான்: சவால் விடுகிறார் ரணிலின் அமைச்சர்!

எதிர்வரும் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள மாற்றத்தைப் பொறுத்திருந்து பார்க்குமாறும் ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமாகிய கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.

மாவனல்லைப் பிரதேசத்தில் இன்று (30) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் விடுத்த கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

எமது கட்சியின் தலைமைத்துவம் குடும்பத்திலிருந்து இன்னொரு குடும்பத்துக்கு செல்வதில்லை. வேறு கட்சிகளில் அடுத்த தலைவர் யார் என்பதை எழுதிக் காட்ட முடியும். ஐ.தே.கட்சியில் அவ்வாறு முடியாது. இதனால்தான், மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக மாற முடிந்தது.

நாம் எங்கு பிறந்தோம். எமது குடும்பப் பின்னணி என்ன என்று பார்க்க மாட்டோம். எதிர்வரும் நாட்களில் ஐ.தே.கட்சியின் சகல பதவிகளும் மாற்றமடையும்.

நாடு கோரும் எந்தவொரு தலைமைத்துவத்தையும் வழங்க முடியுமான ஒரே கட்சி ஐக்கிய தேசியக் கட்சி. எதிர்வரும் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள மாற்றத்தைப் பொறுத்திருந்து பாருங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 + 14 =

*