;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (31.03.2018)

0

சிற்­றூ­ழி­யர்­களுக்கு வெற்­றி­டம் அதி­க­ரிப்பு!!

யாழ். மாவட்­டச் செய­ல­கம் மற்­றும் பிர­தேச செய­ல­கங்­க­ளில் நீண்­ட­கா­லம் பணி­யாற்­றிய சிற்­றூ­ழி­யர்­கள் 20பேர் அலு­வ­லர்­க­ளாக பதவி உயர்­வு­டன் இட­மாற்­றம் பெற்­றுச் செல்­வ­த­னால் சிற்­றூ­ழி­யர்­க­ளுக்­கான வெற்­றி­டம் ஏற்­ப­டு­வ­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

மாவட்­டச் செய­ல­கம் மற்­றும் பிர­தேச செய­ல­கங்­க­ளில் நீண்ட கால­மாக சிற்­றூ­ழி­யர்­க­ளாக பணி­யாற்­றி­ய­வர்­க­ளில் நிரந்­தர நிய­ம­னம் பெற்று 6 ஆண்­டு­க­ளின் பின்பு பதவி உயர்­வுப் பரீட்­சை­யில் தோற்­றி­ய­வர்­க­ளில் 20பேர் சித்தி எய்தி எழு­து­ந­ரா­கப் பதவி உயர்வு பெற்­றுச் செல்­கின்­ற­னர்.

இவர்­கள் 20பேரும் எதிர்­வ­ரும் 2 ஆம் திகதி தொடக்­கம் புதி­தாக நிய­மிக்­கப்­ப­டும் திணைக்­க­ளங்­க­ளில் தம­து ­ப­ணி­க­ளைப் பொறுப்­பேற்­க­வுள்­ள­னர்.

இதே­நே­ரம் பதவி உயர்வு பெற்­றுச் செல்­வ­த­னால் மாவட்­டச் செய­ல­கம் மற்­றும் பிர­தேச செய­ ல­கங்­க­ளில் சிற்­றூ­ழி­யர்­கள் வெற்­றி­டம் அதி­க­ரித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

மாடு கடத்துவோரை பிடிக்க பொலிஸ் சுற்றிவளைப்புகள்!!

தீவுப் பகு­தி­யில் மாடு­கள் கடத்­தலை தடுக்க தீடீர்­சுற்­றி­ வ­ளைப்­பு­க­ளில் ஈடு­பட்டு வரு­வ­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். அந்த வகை­யில் ஊர்­கா­வற்­துறை தலை­மைப் பொலிஸ் பரி­சோ­த­கர் இக்­கும் வீர­சே­கர, தலை­மை­யில் மண்­டை­தீ­வுப் பொலிஸ் பொறு­ப்பதி­காரி, விவே­கா­னந்­தன், குற்­ற­வி­யல் பொலிஸ் பொறுப்­ப­தி­காரி சிவா ஆகி­யோ­ரின் தலை­மை­ யில் அமைக்­கப்­பட்ட பொலிஸ் குழுக்­கள் சுற்­றி­ வ­ளைப்­புக்­க­ளில் ஈடு­பட்­டுள்­ளன என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இந்த நட­வ­டிக்­கை­யில் கடந்த 12ஆம் திகதி, இரு­வர் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டுள்­ள­னர். மாடு கடத்­த­லு­டன் தொடர்­பு­டைய முக்­கிய சந்­தேக நபர் என்று கரு­தப்­ப­டும் இறைச்­சிக்­கடை உரி­மை­யா­ளர் ஒரு­வ­ரும் கடந்த சில தினங்­க­ளுக்கு முன்­னர் கைதாகி விளக்­க­ ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளார்.

புங்­கு­டு­தீவு பகு­தி­யில் நேற்று முன்­தி­ன­மும் மாடு திரு­டிய சந்­தே­கத்­தில் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். மாடு கடத்­த­லு­டன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளைக் கைது செய்­வ­தற்கு தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்­ள­தா­க­வும் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

முத்துஐயன்கட்டு குளத்தின் கீழ் 420 ஏக்கரில் உப உணவுப் பயிர்ச் செய்கை !!

மழை­வீழ்ச்சி குறைவ­டைந்­த­தால் முல்­லைத்­தீவு முத்­து­ஐ­யன் கட்­டுக்­கு­ளத்­தில் நீர் இல்­லா­மை­யால் அனைத்­துக் காணி­க­ளி­லும் உப உண­வுச் செய்கை செய்ய முடி­யாத நிலை­யில் ஏற்று நீர்ப்­பா­ச­னக் காணியை தேர்ந்­தெ­டுத்து நீர்ப்­பம்­பி­மூ­லம் 420 ஏக்­கர் காணி­யில் உப உண­வுப் பயிர்­செய் யத் தீர்­மா­னம் எடுக்­கப்­பட் டது.

மேற்­படி தீர்­மா­னம் எடுப்­ப­தற்­கான ஆலோ­ச­னைக் கூட்­டம் ஒட்­டு­சுட்­டா­னில் நீரப்­பா­ச­னப் பொறி­யி­ய­லா­ளர் தலை­மை­யில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்­றது.

அதன் போது தற்­போது குளத்­தில் 8அடி 7அங்­குல நீர் இருப்­ப­தால் இத­னைக் கொண்டு மிக­வும் சிக்­க­ன­மான முறை­யில் நீரைப் பயன்­ப­டுத்­தும் முக­மாக 13 ஏற்று நீர்ப்­பா­ச­னப் பம்­பி­கள்­மூ­லம் உப உண­வுச் செய்கை மேற்­கொள்­ள­லாம் விவ­சா­யி­க­ளின் ஏகோ­பித்த நிலை­யில் தீர்­மா­னம் எடுக்­கப்­பட்­டது.

இதற்­கான ஆலோ­ச­னை­க­ளை­யும் அனு­ம­தி­யை­யும் அங்கீ­கா­ரத்­தையும் பெறு­வ­தற்­கான முல்­லைத் தீவு மாவட்­டச் செய­லர் கலந்­து­கொள்­ளும் கூட்­டம் எதிர்­வ­ரும் செவ்­வாய்க்­கி­ழமை நடை­பெ­றும் என கூட்­டத்­தில் மேலும் தெரி விக்­கப்­பட்­டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five − three =

*