;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4..!! (31.03.2018)

0

மைத்திரி குணரத்ன பிணையில் விடுதலை

இன்று மாலை கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் செயலாளர் மைத்திரி குணரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு கைத்துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் அவர் கடுகண்ணாவ பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட மைத்திரி குணரத்ன, கைத்துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரத்தை காண்பித்ததையடுத்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சொத்து விபரங்களை வெளிக்காட்டாதவர்கள் மீதான அபராத தொகை அதிகரிக்கிறது

சொத்து விபரங்களை வௌிக்காட்டாத அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளிடம் விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கூறியுள்ளது.

அதன்படி, இதுவரை அறவிடப்பட்ட 1000 ரூபா தொகையை ஒரு இலட்சம் ரூபாவாக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நெவில் குருகே கூறினார்.

குறித்த அபராத தொகையை திருத்தம் செய்வதற்கான பரிந்துரைகள் தற்போது அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உயர் வகுப்பு அரச ஊழியர்கள் மற்றும் அரசியல்வாதிகள் அவர்களின் சொத்துக்கள் குறித்த ஆண்டறிக்கையை சமர்பிப்பது கட்டாயமானது என்று ஆணையாளர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் நூற்றுக்கு 75 வீதமானவர்கள் தமது சொத்துக்கள் குறித்த ஆண்டறிக்கையை வௌிப்படுத்துவதில்லை என்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நெவில் குருகே கூறினார்.

அதற்கேற்ப அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளிடம் விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரிக்க முடிவு செய்திருப்பதாக நெவில் குருகே கூறினார்

பிரதமருக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவு: பேரணி மாவனெல்லயை சென்றடைந்தது

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி ஆரம்பிக்கப்பட்ட பேரணி இன்று மாலை மாவனெல்லயை சென்றடைந்தது.

”சர்வாதிகார நண்பர்களைத் தோற்கடிப்போம்” என்ற தொனிப்பொருளில், ஐக்கிய தேசியக் கட்சியைப் பாதுகாக்கும் அமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி என்பன இணைந்து இந்த பேரணியை ஏற்பாடு செய்துள்ளன.

கண்டி கெடம்பே விஹாரையில் நடைபெற்ற சமய வழிபாடுகளின் பின்னர், இன்று காலை இந்தப் பேரணி கெடம்பே மைதானத்திற்கு அருகில் இருந்து ஆரம்பமானது.

பேரணி பேராதனை, கிரிபத்கும்புர, பிலிமதலாவை, கடுகன்னாவ நகர்களைக் கடந்து இன்று மாலை மாவனெல்லயை அடைந்தது.

மாவனெல்ல நகரில் இருந்து நெலும்தெனிய வரை பேரணி நாளை பயணிக்கவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × one =

*