;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (01.04.2018)

0

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கபே

தேசிய அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மையே கலப்பு தேர்தல்முறை பிழையானதென விமர்சனத்துக்குள்ளாகக் காரணமாகும். இதனைக் காரணம் காட்டி மாகாணசபைத் தேர்தல் காலம் தாழ்த்தப்படக் கூடாது என தெரிவித்த கபே அமைப்பின் நிர்வாக பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன்,

2017 ஆம் ஆண்டு திருத்தச்சட்டத்துக்கு அமைய மாகாண சபைத் தேர்தலை கலப்பு முறையில் நடத்தலாம். ஆனால் மாகாண சபைத் தேர்தல் நடத்துவது குறித்து அரசாங்கம் இது வரையில் எந்தவிதமான அறிவிப்பையும் விடுக்காமல் உள்ளது.

பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் அப்பிரேரணைக்கு ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ஆதரவு கிடைக்கப்பெற்றுள்ளமை போன்றன மாகாண சபைத் தேர்தலில் பாரிய தாக்கத்தினை செலுத்தியுள்ளன. இந்த நெருக்கடி நிலைமையினை மையமாகக் கொண்டு மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடும் நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.

மாகாணசபை தேர்தலின் அவசியம் குறித்து விளக்கமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மீண்டும் ஐ.தே. கட்சியின் பாராளுமன்றக்குழு பிரதமர் தலைமையில் கூடுகின்றது.!

பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிப்பது குறித்து ஆராய நாளை மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக்குழு பிரதமர் தலைமையில் கூடுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் தனித்தனியே சந்தித்து தனது நிலைப்பாட்டினை பிரதமர் வெளிபடுத்துவார் எனவும் கூறப்படுகின்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினர் கடுமையான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. கடந்த வாரங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டங்கள், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படும் பங்காளிக் கட்சிகளின் தலைவர் சந்திப்புகள் என இடம்பெற்று வந்த நிலையில் நாளை மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் கூடுகின்றது.

பிரதமரின் அழைப்பின் பெயரில் நாளை காலை அலரிமாளிகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் சகல பாரளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாரளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் தனித்தனியே சந்தித்து நிலைமைகளை தெளிவுபடுத்தவும் பிரதமர் முயற்சித்து வருகின்றனர் எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வாகன பற்றரிகளை திருடியவர் கைது

கட்டுகஸ்தோட்டை பிரதேசம் மற்றும் அதற்கு அருகிலுள்ள பகுதிகளில், லொறி உள்ளடங்களாக ஏனைய வாகனங்களிலும் உள்ள பற்றரிகளை திருடி விற்பனை செய்துவந்த நபர் ஒருவர், நேற்று (31) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடையவர் எனவும் அவரிடமிருந்து வாகன பற்றரிகள் 20 கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 − 4 =

*