;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (01.04.2018)

0

கண்டி சம்பவம் தொடர்பில் இராணுவ வீரர் உட்பட நால்வர் கைது

கண்டியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை தொடர்பில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் உட்பட நால்வரை பயங்கரவாத விசாரணை பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

மின் கம்பத்தில் மோதி ஒருவர் பலி

வவுனியா – கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் 22 வயதுடைய சாந்தவேலு ரொகான் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

A-9 வீதியூடாக கிளிநொச்சி நோக்கி குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதியுள்ளது.

இதனையடுத்து, குறித்த இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கபே

தேசிய அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மையே கலப்பு தேர்தல்முறை பிழையானதென விமர்சனத்துக்குள்ளாகக் காரணமாகும். இதனைக் காரணம் காட்டி மாகாணசபைத் தேர்தல் காலம் தாழ்த்தப்படக் கூடாது என தெரிவித்த கபே அமைப்பின் நிர்வாக பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன்,

2017 ஆம் ஆண்டு திருத்தச்சட்டத்துக்கு அமைய மாகாண சபைத் தேர்தலை கலப்பு முறையில் நடத்தலாம். ஆனால் மாகாண சபைத் தேர்தல் நடத்துவது குறித்து அரசாங்கம் இது வரையில் எந்தவிதமான அறிவிப்பையும் விடுக்காமல் உள்ளது.

பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் அப்பிரேரணைக்கு ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ஆதரவு கிடைக்கப்பெற்றுள்ளமை போன்றன மாகாண சபைத் தேர்தலில் பாரிய தாக்கத்தினை செலுத்தியுள்ளன. இந்த நெருக்கடி நிலைமையினை மையமாகக் கொண்டு மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடும் நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.

மாகாணசபை தேர்தலின் அவசியம் குறித்து விளக்கமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − seven =

*