;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (02.04.2018)

0

கண்டி வன்முறைகள் படையினர் உட்பட நால்வர் கைது..!!

கண்டியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை தொடர்பில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் உட்பட நால்வரை பயங்கரவாத விசாரணை பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

கண்டி தெல்தெனிய சம்பவம் இன்று மீண்டும் விசாரணைக்கு

கண்டி – தெல்தெனியவில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

கடந்த மாதம் 19 ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொண்ட போது கைது செய்யப்பட்டிருந்த 24 பேரில் 8 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் ஏனையோர் இன்று வரை விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை 1996 ஆம் ஆண்டு நாவற்குழியில் காணாமல்போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு, இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மைத்திரிக்கு எதிராக குற்றப் பிரேரணை?

தலைமை அமைச்­சர் ரணி­லுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் மண்­கவ்­வும் பட்­சத்­தில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­ சே­ன­வுக்கு எதி­ராக குற்­றத் தீர்­மா­னத்­தைக் கொண்­டு ­வ­ரு­வது தொடர்­பில் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் சிலர் ஆராய்ந்து வரு­கின்­ற­னர் என்று தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத்­தைக் கொண்­டு­வ­ர­வும், கூட்டு அரசு மீது மக்­கள் மத்­தி­யில் மாறு­பட்ட நிலைப்­பா­டு­கள் தோன்­ற­வும் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் பொறுப்­பு­ணர்­வற்ற செயற்­பா­டு­களே கார­ண­மென ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் முக்­கிய தலை­வர்­கள் ரணி­லி­டம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­னர்.

உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் வாக்கு வங்­கி­யில் கடும் சரிவு ஏற்­ப­டு­வ­தற்­குப் பிர­தான கார­ணம், தேர்­தல் மேடை­க­ளில் அரச தலை­வர் மைத்­திரி, ஐ.தே.க. மீது சுமத்­தி­யி­ருந்த குற்­றச்­சாட்­டு­க­ளா­கும் என்று அந்­தக் கட்­சி­யின் உறுப்­பி­னர்­கள் தமது தலை­மை­யி­டம் கருத்­து­களை முன்­வைத்­தி­ருந்­த­னர்.

கூட்டு அர­சின் பிர­தான பங்­கா­ளி­யா­க­வுள்ள சுதந்­தி­ரக் கட்­சி­யின் செய்­பா­டு­களே இவ்­வாறு பெரிய பிரச்­சி­னை­கள் எழு­வ­தற்­குக் கார­ண­மென்ற பின்­பு­லத்­தின் அடிப்­ப­டை­யில் மைத்­தி­ரிக்கு எதி­ராக குற்­றத் தீர்­மா­னம் தொடர்­பில் ஆலோ­சிக்­கப்­பட்­டுள்­ள­தாக அறி­ய­மு­டி­கி­றது.

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யி­லுள்ள சட்­டத்­து­றை­யில் நிபு­ணத்­து­வம்­பெற்ற அமைச்­ச­ரொ­ரு­வ­ரின் ஊடாக இதற்­கான நட­வ­டிக்­கை­கள் இடம்­பெ­ற­வுள்­ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 + nine =

*