;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (02.04.2018)

0

மதுர விதானகே புதிய மேயராக தெரிவு செய்யப்பட்டார்

ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபையின் புதிய மேயராக மதுர விதானகே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மதுர விதானகேவுக்கு ஆதரவாக 23 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

புதிய மேயர் தெரிவுக்காக ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட சந்திம நயனஜித்துக்கு 11 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரேமலால் அதுகோரள பிரதி மேயராகவும் தெரிவிசெய்யப்பட்டுள்ளார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்றக் குழு பிர­தமர் தலை­மையில் இன்று கூடு­கின்­றது.!

பிர­த­ம­ருக்கு எதி­ராக கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணையை தோற்­க­டிப்­பது குறித்து ஆராய இன்று மீண்டும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்­றக்­குழு பிர­தமர் தலை­மையில் கூடு­கின்­றது. ஐக்­கிய தேசியக் கட்­சியின் சகல பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளையும் தனித்­த­னியே சந்­தித்து தனது நிலைப்­பாட்­டை பிர­தமர் வெளிப்­ப­டுத்­துவார் எனவும் கூறப்­ப­டு­கின்­றது.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் பாரா­ளு­மன்­றத்தில் கொண்­டு­வந்­துள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை தோற்­க­டிக்க பிர­தமர் தலை­மை­யி­லான ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் கடு­மை­யான முயற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். கடந்த வாரங்­களில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­குழுக் கூட்­டங்கள், ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து செயற்­படும் பங்­காளிக் கட்­சி­களின் தலைவர்களுடன் சந்­திப்­புகள் என இடம்­பெற்று வந்த நிலையில் இன்று மீண்டும் அக் கட்­சியின் பாரா­ளு­மன்றக் குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது. இன்று பிற்பகல் 2 மணிக்கு அல­ரி­மா­ளி­கையில் நடைபெறவுள்ள இக் கூட்டத்தில் சகல உறுப்பினர்களையும் பங்கேற்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இரா­ஜாங்க அமைச்சர் அஜித் பி. பெரேரா கூறு­கையில்,

பிர­த­ம­ருக்கெதி­ராக கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை கட்­டா­ய­மாக தோற்­க­டிக்க வேண்டும். தேசிய அர­சாங்­கத்தை குழப்பி அதன் மூலம் மீண்டும் குடும்ப ஆட்­சி­யைக் கொண்­டு­வர முயற்­சிக்கும் மஹிந்த அணி­யினர் பாரிய சதித்திட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். இந்­நி­லையில் ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் முரண்­பா­டுகள் உள்­ளன எனக் கூறியும் ஆத­ரவு இழக்­கப்­ப­டு­வ­தாக பொய்­யான கருத்­துக்­களை கூறியும் அர­சாங்­கத்­தினுள் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த முயற்­சித்து வரு­கின்­றனர். எனினும் ஐக்­கிய தேசியக் கட்சி பல­மாக உள்­ளது. எமது உறுப்­பி­னர்கள் அனை­வரும் ஒரே நிலைப்­பாட்டில் இருந்தே செயற்­பட்டு வரு­கின்­றனர். அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் ஒருசிலர் பிர­த­ம­ருக்ெகதி­ராக கருத்­துக்­களை கூறிய போதிலும் கட்­சியின் இறுதி நிலைப்­பாடு அது­வல்ல. ஜனா­தி­ப­தியோ பொதுச்­செ­ய­லா­ளரோ கட்­சியின் நிலைப்­பாட்டை இன்னும் முன்­வைக்­க­வில்லை. தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும் இன்னும் தமது நிலைப்­பா­டு­களை கூற­வில்லை. இன்றும் அவர்கள் அர­சாங்­கத்தை காப்­பாற்ற வேண்டும் என்ற நிலையில் இருந்தே செயற்­பட்டு வரு­கின்­றனர். எனவே அர­சாங்­கத்தை ஆத­ரிக்கும் தரப்புக்கள் அதி­க­மாகும்.

ஆகவே பிர­த­ம­ருக்கெதி­ராக கொண்­டு­வரப்பட்டுள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை நாம் தோற்­க­டிப்போம். இந்­நி­லையில் நாளை (இன்று ) ஐக்­கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் பிரதமர் தலைமையில் கூடுகின்றது. காலையில் நாம் சந்திப்புகளை நடத்து வோம். ஐக்கிய தேசிய முன்னணியின் சகல தலைமைகளும் பாராளுமன்ற உறுப் பினர்கள் அனைவரும் கலந்து கொள்வார் கள் என்றார்.

’நாட்டு நலன் கருதியதாக கூட்டமைப்பின் தீர்மானம் அமையும்’

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இறுதித் தீர்மானம் இன்று அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் பின்னர், கூட்டமைப்பின் இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படுமென கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இன்று எடுக்கும் தீர்மானமானது நாட்டுக்கும், மக்களுக்கும் நம்மை பயக்கும் வகையில் அமையுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்துக்கு வி​​சேட பாதுகாப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு நாளைமறுதினம்(04) நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்றத்துக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இன்று விசேட பேச்சுவார்த்தை ஒன்றும் நடைபெற உள்ளது. இதில் நாடாளுமன்ற பார்வையாளர் கலரியில், உள்ள ஆசனங்களை குறைப்பது மற்றும் வாகனங்கள் நிறுத்தம் இடம் தொடர்பாகவும் கலைந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 + 20 =

*