;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (02.04.2018)

0

ஶ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய பணிப்பாளர் சபை

ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்திற்கான புதிய பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

ரஞ்சித் பெர்ணேன்டோ ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக, மனோ தித்தவெல்ல, சுசந்த கடுகம்பொல, டொக்டர். ரொஷான் பெரேரா, ஏயார் மார்ஷல் கபில ஜயம்பதி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் இடமாற்றம்

தேசிய பாடசாலைகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள ஆசிரியர்கள், எதிர்வரும் 05ஆம் திகதி வியாழக்கிழமை முதல் புதிய, இடமாற்றப் பாடசாலைகளில் கடமையேற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இடமாற்ற ஆசிரியர்களுக்கான கடிதம், மார்ச் 29ஆம் திகதி வியாழக்கிழமை, கல்வி அமைச்சில் வைத்து சம்பந்தப்பட்ட அதிபர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த கல்வி அமைச்சின் செயலாளர், ஒரே பாடசாலையில் சுமார் 10 வருடங்களுக்கும் அதிகமான காலம் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு, கல்வி அமைச்சு இடமாற்றம் வழங்கியுள்ளது என்று மேலும் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் தேசிய பாடசாலைகளில் கடமையாற்றும் சுமார் 3,766 ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குறித்த ஆசிரியர்கள் தங்களது இடமாற்றம் தொடர்பில், மேன்முறையீடு செய்ய விரும்பின், அது தொடர்பான விண்ணப்பத்தை புதிய பாடசாலை அதிபரூடாக அனுப்பி வைக்குமாறு, இடமாற்ற ஆசிரியர்களை அதிபர்கள் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், ஒரே பாடசாலையில் சுமார் 25 வருடங்களுக்கும் அதிகமான சேவைக் காலத்தை உடைய ஆசிரியர்களும் இடமாற்றம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசின் தேசிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கைக்கமைவாக, ஆசிரியர் இடமாற்ற சபையின் உதவியுடன் இவ்விடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

’நம்பிக்கையில்லாப் பிரேரணையின் வெற்றி ஜனாதிபதியின் கையிலேயே உள்ளது’

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆதரவு வழங்குவார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

“ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்வதன் மூலம் இந்த வரலாற்று வெற்றியை ஜனாதிபதியால் உறுதிப்படுத்த முடியும்” என அவர் இந்தியன் எக்ஸ்பிஸ் ஊடகத்துக்குத் தெரிவித்துள்ளார்.

நாளை மறுதினம் நடைபெறவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தோல்வியடையும் பட்சத்தில், நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதிமன்றத்துக்கு ஹெரோய்னுடன் வந்த பெண் கைது

கொழும்பு நீதவான் நீதிமன்றத்துக்கு ​ஹெரோய்னுடன் வருகை தந்த பெண் ஒருவர், இன்றைய தினம் (02) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜகிரிய பிர​தேசத்தில் வசிக்கும் 33 வயதுடைய குறித்த பெண், தனது தந்தையின் வழக்கு ஒன்றுக்காக நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்த வேளையில், 4 கிராம் ஹெரோய்ன் போதைப் பொருளையும் கொண்டுவந்ததுக்கு அமைய, பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine + 1 =

*