;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-5.!! (02.04.2018)

0

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் விஷேட கலந்துரையாடல்

தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹவிற்கும் இடையில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

இதில் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

ஜனாதிபதியின் உத்தியோபூர்வ இல்லத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்வி சாரா ஊழியர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் கடந்த ஒருமாத காலமாக மேற்கொண்டுவரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட இணக்கம் தெரிவித்துள்ளதாக உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கபிர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

அமைச்சுக்கும், ஊழியர்களுக்கும் இடையில் இன்று நடைபெற்ற பேச்சுவர்த்தையை அடுத்து பேராட்டத்தை கைவிடுவது தொடர்பில் இணக்கம் காணப்பட்டதாக அமைச்சர் கபீர் ஹாசிம் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கல்வி சாரா ஊழியர்கள் விடுமுறைத் தினங்களில் பணியாற்றுவதற்கான கொடுப்பனவை 10 வீதத்தால் அதிகரிப்பதற்கு அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்க இணைக் குழுவின் தலைவர் எட்வர்ட் மல்வட்டகே தெரிவித்துள்ளார்.

எனினும் இந்தத் தீர்மானம் தொடர்பில் சுற்று நிரூபம் வெளியிடப்படும் வரை தமது தொழிற்சங்க போராட்டம் தொடருமெனவும், நாளைய தினத்திற்குள் சுற்றுநிரூபத்தை வெளியிடுவதற்கு அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஊழியர்கள் முன்வைத்துள்ள ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு பிரத்தியேக குழு ஒன்றை நியமிப்பதற்கும் அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

’இறைமையையும் ஆட்புல எல்லையையும் பாதுகாக்கும் விமானப்படைக்கு பாராட்டு’

ஆறு தசாப்தங்களுக்கு மேலாக தாய் நாட்டின் இறைமையையும் ஆட்புல எல்லையையும் பாதுகாப்பதற்கு இலங்கை விமானப்படை மேற்கொண்டுவரும் விசேட பணிகளை பாராட்டுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தியத்தலாவை இலங்கை விமானப்படை போர்ப் பயிற்சி கல்லூரியின் ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டுக்காக உயிர் நீத்த மற்றும் அங்கவீனமுற்ற படைவீரர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி கடந்த காலங்களில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தங்களின்போது இலங்கை விமானப்படையினர் மேற்கொண்ட பங்களிப்புகளைப் பாராட்டினார்.

விமானப்படை பயிற்சிக் கல்லூரியின் எதிர்கால முன்னேற்றத்திற்காகவும் இலங்கை விமானப்படை உறுப்பினர்களுக்கு தொழிற்பயிற்சி மற்றும் தொழிநுட்ப அறிவை வழங்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவதாகவும் ஜனாதிபதி இதன்போது உறுதியளித்தார்.

தியத்தலாவை இலங்கை விமானப்படை பயிற்சிக் கல்லூரியின் அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவி நிலை அதிகாரிகள், இலங்கை விமானப்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தி தமது சக்தி, அறிவு மற்றும் ஆக்கத்திறன்களைப் பயன்படுத்தி தாய் நாட்டுக்கு வழங்கிவரும் சேவைகளைப் பாராட்டி இதன்போது ஜனாதிபதி விருதுகள் வழங்கிவைக்கப்பட்டன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 + 18 =

*