;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (03.04.2018)

0

பிரதமர் பதவி விலக வேண்டும் என முடிவு

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் பதவி விலக வேண்டும் என முடிவெடுத்துள்ளனர்.

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்தே ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக இந்த முடிவை எடுத்துள்ளனர்.

தொழிற்சங்க போராட்டத்திற்கு தயாராகும் புகையிரத ஊழியர்கள்

புகையிரத சேவையை தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நாட்களில் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பு கூறியுள்ளது.

புகையிரத திணைக்களத்தை தனியான நிர்வாக சபையின் கீழ் மாற்றுவதற்கு கடுமையான எதிர்ப்பை வௌியிடுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. விதானகே இந்த விடயத்தை கூறினார்.

ஐரோப்பிய பாராளுமன்ற குழு நாளை இலங்கை விஜயம்

ஐரோப்பிய பாராளுமன்றத்தின் உயர் மட்ட உறுப்பினர்கள் குழுவொன்று நாளைய தினம் இலங்கை வரவுள்ளது.

அந்தக் குழுவினர் எதிர்வரும் 6 ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டதன் பின்னர் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் அது சம்பந்தமாக காணப்படுகின்ற பிரச்சினைகள் குறித்து தேடிப்பார்க்க இந்த குழு இலங்கை வருகிறது.

அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வர்த்தகர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் உள்ளிட்டவர்களை கொழும்பில் வைத்து அந்தக் குழுவினர் சந்திக்கவுள்ளனர்.

கடந்த ஆண்டு மே மாதம் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை மீள வழங்​க ஐரோப்பிய பாராளுமன்றத்தின் சர்வதேச வர்த்தகம் நம்பந்தமான குழு தீர்மானித்திருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + 11 =

*