;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2.!! (03.04.2018)

0

அங்கொட லொக்காவின் சகா சிக்கினார்

பிரபல பாதாள உலக குழுத்தலைவரான அங்கொட லொக்காவிற்கு மிகவும் நெருக்கமான சந்தேகநபரான எலவலகே சரத்குமார எனப்படும் சீட்டி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இவர் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.

கொட்டிகாவத்தை பிரதேசத்தில் உள்ள அவரின் வீட்டில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்படும் போது அவரிடம் இருந்த கைக்குண்டு ஒன்றும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் இதற்கு முன்னரும் பல தடவைகள் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் என்று தெரிய வந்துள்ளது.

சந்தேகநபர் தற்போது பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருவதுடன், அதன் பின்னர் அவர் திட்டமிட்ட குற்றச் செயல் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.

கிளிநொச்சியில் பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளது

கிளிநொச்சி மாவட்டத்தில் தரம் 1 இல் மாணவர்கள் இணைவதில் காணப்படுகின்ற வீழ்ச்சி நிலையானது, கிளிநொச்சி மாவட்டத்தின் பிறப்பு வீதத்தின் வீழ்ச்சியைக்காட்டுவதாக, கிளிநொச்சி வலயக்கல்விப்பணிப்பாளர் ஜோன்குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இணைத்தலைவர்கள் தலைமையில் நேற்று (02) நடைபெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவித்த வலயக்கல்விப்பணிப்பாளர்,

கடந்த சில ஆண்டுகளாக தரம் 1 இல் மாணவர்கள் இணைவது மிகக்குறைவாகக் காணப்படுகின்றது. கடந்த 2016ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 565 மாணவர்கள் தரம் 1 இல் இணைந்து கொண்டனர். இதே போன்று 2017ஆம் ஆண்டில் 2ஆயிரத்து 319 மாணவர்கள் தரம் 1 இல் இணைந்த கொண்டனர். 2018 ஆம் ஆண்டில் 2ஆயிரத்து 180 மாணவர்கள் இணைந்து கொண்டுள்ளனர். இவ்வாறு மாணவர்களின் இணைவு வீதம் மிகக்குறைவடைந்து செல்கின்றது.

இவ்வாறு குறைவடைந்து செல்வதுக்கு இந்த மாவட்டத்தில் உள்ள பிறப்பு வீதத்தின் குறைவையே அவதானிக்க முடிகின்றது.

பிறப்பு வீதங்களை அதிகரிப்பதுக்கான பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.

ஜனாதிபதி தலைமையில் சு.க, ஐ.தே.க உறுப்பினர்கள் சந்திப்பு

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்ததை ஒன்று இன்று நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி, பிரதமர், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி அமைச்சர்களுக்கு இடையில் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளதோடு, பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்படுமென ஐக்கிய தேசிய முன்னணி அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமைய, ஜனாதிபதி தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்றைய தினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் அலட்சியப் போக்குடன் நடந்துகொள்ள வேண்டாமென ஜனாதிபதி பிரதமரை எச்சரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரேரணையில் பிரதமருக்கு 50 வீதமான வாய்ப்புகளே காணப்படுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இந்த சந்திப்பின்போது, அரசாங்கத்தின் எஞ்சியிருக்கும் காலத்தை எவ்வாறு கொண்டுசெல்வது என்பது தொடர்பில் மாற்று வழி ஒன்றை சிந்திக்குமாறும், அது தொடர்பிலான நிகழ்ச்சித் திட்டமொன்றை தயாரிக்குமாறும் ஜனாதிபதி ஐ.தே.க உறுப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 − 7 =

*